பக்கம்:பிறந்த மண்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த் தசாரதி 27%

இருவரும்.பகல் உணவு நேரத்திற்கு வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தார்கள். சாப்பிடும்போது வழக்கமாக அதிகம் பேசும் அவன் அன்னை அன்று பேசவே இல்லை நீங்கள் வெளியில் போன சிறிது நேரத்துக்கெல்லாம் பன்னிர்ச்செல்வம் வந்து தேடிவிட்டுப் போனார் அண்ணா!' என்று வள்ளியம்மை அவனிடம் கூறினாள். அவர் எதற்காக வந்திருப்பாரென்று அவனால் அனுமானிக்க முடிந்தது.

சாப்பிட்டுவிட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, 'அந்த நிலத்தில் எடுத்த எடுப்பில் நெல்லோ, வேறு தானிய்மோ பயிரிடவேண்டாம். முரட்டு உழவாக இரண்டு உழவு உழுது தக்காளி, முட்டைக்கோஸ், சீமை வெங்காயம் உருளைக் கிழங்கு, கேரட்.... என்று இப்படிக் காய்கறி வகை களாகப் பயிர் செய்தால் பத்தே மாதங்களில் பணத்தைச் குவித்து விடலாம்'-என்று இருந்தாற்போலிருந்து சொன்ன்ான் முருகேசன்

'உன்னை நம்பிக் காரியத்தில் இறங்கிவிட்டேன். பணத் துக்கு வழி செய்யவேண்டியது உன் பொறுப்பு. என்னைக் கைவிட்டு விடாதே"- என்றான் அழகியநம்பி.

அன்று மாலை மறுபடியும் அவர்கள் மலையடிவாரத் துக்குப் போய் அந்தப் படுகை மேட்டை நிதானமாகச் சுற்றிப் பார்த்தனர். நிலம் உரமுள்ளத்ாக-சத்து வாய்ந்த தாகவே தெரிந்தது. இடை இடையே இருந்த கற்களை அப் புறப்படுத்தி, மேடு பள்ளங்களைச் சரிசெய்து நிரவி உழுது விட்டால் தங்கமான நிலமர்கிவிடும் என்று தோன்றியது.

'படுகை ஆற்றுமட்டத்தைவிட, மேடாக இருப்பதால் தண்ணிர் ஆற்றிலிருந்து பாயாது. அருவி விழுகிற இடத்தி லிருந்து ஒரு வாய்க்கால் வெட்டிக் கொண்டால் நிலத்துக்கு வேண்டிய தண்ணிர் பாயும்”-என்று: முருகேசன் யோசித்துப் பார்த்துச் சொன்னான். இருவரும் அங்கேயே மரத்தடியில்

பி-18 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/279&oldid=597842" இலிருந்து மீள்விக்கப்பட்டது