பக்கம்:பிறந்த மண்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. பிறந்த மண்.

நின்றார்கள். அவர்களுடைய அந்தப் பார்வையில் அன்பா, ஏக்கமா, அல்லது அனுதாபமா-எது அதிகமிருந்தது என்பதைக் கண்டுபிடிப்பது அரிதாயிருந்தது. இருவர் பார் வைக்குள்ளும் வேறுபாடு இருந்தது. வளைக்குள்ளிருந்து மிரண்ட பார்வையோடு தலைநீட்டிப் பார்க்கும் முயல் குட்டி போல் பார்த்தாள் கோமு. பகவதியின் பார்வைக்கு என்ன பொருள் கற்பித்துக்கொள்ளலாமென்று ஆனமட்டும் முயன்று பார்த்தான் அழகியநம்பி. கெண்டை மீனைப் போலப் பிறழும் அந்த அழகிய நீள்விழிகளில் மித்க்கும். உணர்ச்சி என்னவென்று அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. - - -

காந்திமதி ஆச்சியின் கடையிலிருந்து வெளியேறிய பின்புதான் அவன், ஆரம்பத்தில் கூறியவாறு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்துகொண்டிருந்தான். அவன் பஸ் ஸ்டாண்டு வாசலில் கால் வைத்த நேரத்தில் எதிரே கையில் பையோடும் தலையில் குளிருக்காகக் காதுமறைய மப்ள ரைக் கட்டிக் கொண்ட தோற்றத்தோடும் பிரமநாயகமே வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தார். அவரை எதிரே பார்த்ததும் மேலே நடக்கத் தோன்றாமல் அப்படியே நின்று விட்டான் அழகியநம்பி, திடீரென்று அவரைஎதிரே -பார்த்துவிட்ட அதிர்ச்சியில் என்ன பேசுவதென்றே

அவனுக்குத் தோன்றவில்லை. r.

அவர் அருகில் வந்ததும் மரியாதைக்குக்கைகூப்பினான். பிரமநாயகம் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.முகத்தைச் சுளித்தார். அவனுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்ட தற்கு அடையாளமாக பதில் வணக்கமோ, புன்முறுவலோ, அவர் செய்யவில்லை. அவர் மனத்தில் வெறுப்பேர், கோபமோ ஏற்பட்டிருக்கிறதென்று தீர்மானித்துக் கொள்ள அழகிய நம்பிக்கு அதிக நேரமாகவில்லை. . - "துரைமகனுக்குச் சொன்னால் சொன்ன தேதிக்கு ஒழுங்காகக் கப்பலேறுவதற்கு, வந்து சேர முடியவில் லையோ?--குத்தலாகக் கேட்டார் பிரமநாயகம், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/28&oldid=596660" இலிருந்து மீள்விக்கப்பட்டது