பக்கம்:பிறந்த மண்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பிறந்த மண்

உட்கார்ந்து காகிதத்தில் புள்ளிவிவரக் கணக்கோடு ஒரு திட்டம் போட்டுப் பார்த்தார்கள். அந்த நிலத்தைப் பண் படுத்திப் பயிர் செய்ய ஆகும் செலவு, அதில் கிடைக்கலா மென்று தோன்றிய விளைவின் பண மதிப்பு-இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். அவர்கள் மிகவும் ஆச்சரியப் படுகிற அளவிற்கு இலாபம் கிடைக்கும் போலத் தெரிந்தது. அவர்கள் எதிர்பார்த்தபடி இரண்டே நாட்களில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார். அவர் நிலத்தைப் பார்வையிடும்போது அழகியநம்பி, முருகேசன் முன்சீப் புன்னைவனம் ஆகியோரும் உடன் இருந்தனர். ரெவின்யூ இன்ஸ்பெக்டர் நல்ல மனிதராக இருந்தார். பெருந்தன்மை யோடு நடந்து கொண்டார், மற்றவர்களைப் போல் அவநம்பிக்கையூட்டுவாரோ என்று அழகியநம்பிக்கு ஒரு பயம் இருந்தது. “சபாஷ்! உன் திட்டத்தையும் முயற்சி யையும் பாராட்டுகிறேன். நீ வெற்றி பெறுவாய்”-என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர் தன் நோக்கங் களை அவரிடம் விரிவாக எடுத்துக் கூறினான்.

"உன்னைப்போல் நம் நாட்டுப் படித்த இளைஞர்களில் நூற்றுக்குப் பத்துப் பேராவது முன்வந்திருந்தால் இந்த நாடு எப்போதோ உருப்பட்டு முன்னேறியிருக்குமே!"என்று அவர் கூறியபோது அவனுக்குப் பெருமையாயிருந்தது.

'நான் போய் உத்தரவு அனுப்பிவிடுகிறேன்!”-என்று சொல்லிவிட்டுப் போனார் அவர். மறுநாளே பணம் தயார் செய்வதற்காக அழகிய நம்பியைக் கூட்டிக்கொண்டு முருகே சன் தென்காசிக்குப் புறப்பட்டான். த்ென்காசியில் அழகிய நம்பி மூன்று, நான்கு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. முருகேசனும், அவன் தந்தையுமாக அவனைக் கூட்டிக் கொண்டு பணம் படைத்தவர்களிடமெல்லாம் அலைந்தனர். கண்டசியில் முக்கால் வட்டிக்குப் புரோநோட்டு எழுதிக் கொடுத்து மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கினார். கடன் கொடுத்த பணக்காரர் முருகேசனின் தகப்பனாருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/280&oldid=597844" இலிருந்து மீள்விக்கப்பட்டது