பக்கம்:பிறந்த மண்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 28i

காத்திமதி ஆச்சி அவன் எண்ணி வைத்த பணத்தை எடுக்காமல் அவனை வினவினாள். அழகியநம்பி ஆச்சியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னான்.

"இதோ பாருங்கள் ஆச்சி! உங்கள் பெண் பகவதியைத் தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் செய்து கொள்ள போவதில்லை. ஆனால், நீங்கள் இன்னும் ஒரு வருவத் எனக்காகப் பொறுத்திருக்க , வேண்டும். உங்களுக்குப் பொறுமை இருக்குமானால் அதுவரை காத்திருக்கலாம். இந்தப் பதிலைத் தான் இப்போது நான் உங்களுக்குச் சொல்ல முடியும்...” -

"ஏன் ஒரு வருஷம் என்ன செய்யப் போகிறாயாம்?"

"அது உங்களுக்கே தெரியும்.”

'அந்தப் படுகை மேட்டு - நிலத்தில் உழைப்பையும் பணத்தையும் வீணாக்கப் போகிறாயாக்கும்."

"ஆச்சி! பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தான் வருகிறேன்.-அழகியதம்பி அவள் கேட்ட கேள் விக்கு நேரடியாகவே பதில் சொல்லாமல் விடைபெற்றுக் கொண்டு கிளம்பி விட்டான். கதவிடுக்கிலிருந்து அவனை நோக்கும் அந்தக் கண்கள் அன்றும் அங்கிருந்து அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தன. ஆனால், அவன் அவற் றைப் பார்க்கவில்லை

'மாமா மாமா! உங்களை...உங்களை அம்மா கூப்பிடு - கிறாள்' என்று தெருவாசற்படி வரை அவனைத் துரத்திக் கொண்டு வந்தாள் கோமு. அவள் காதில் கேட்காதது போல தெருவில் இறங்கி வேகமாக நடந்தான்.

"அம்மா நான் கூப்பிட்டேன். அவர் பேசாமல் போய் விட்டார்-என்று ஏமாற்றத்தோடு திரும்பி வந்து ஆச்சி

பிடம் கூறினாள் கோமு,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/283&oldid=597853" இலிருந்து மீள்விக்கப்பட்டது