பக்கம்:பிறந்த மண்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. உழைப்பு உழைப்பு!

உழுது பழகாத கைகள் தொடக்கத்தில் வருந்தின. மலைப்பு அடைந்தன. அதைரியமோ, சோர்வோ அடைந்து விடாமல், பொறுமையாக வேலை செய்தான் அழகியநம்பி. ஆற்றுப்படுகையாதலால் தரை அதிகமாக இறுகியிருக்க வில்லை. கலப்பையின் கொழு நுனி சுலபமாகவே மண்ணில் நுழைந்து றிேக்கொண்டு போயிற்று. நிலா நாட்களில் இர விலும் ஏர் பூட்டி உழுதான். மேழியைப் பிடித்து அவன் கைகள் சிவந்து கன்றின. கால்கள் நடந்து அலுத்தன.

உழுதசாலுக்குள் மண்ணில் மறைந்திருந்த கற்கள் எற்றி எத்தனை தடவை அவன் கால் விரல்களின் இரத்தம் அந்த மண்ணை நனைத்திருக்கும்? மண்வெட்டியால் வாய்க்க்ால் வெட்டும்போது தவறிப்போய்க் காலில் போட்டுக்கொண்டு எத்தனை முறை இரத்தம் சிந்தியிருப்பான் அவன்? எத்தனை முட்கள் தைத்திருக்கும்? எத்தனை கற்கள் எற்றியிருக்கும்? ஒய்வு ஒழிவில்லாமல் எல்லாவற்றையும்பொறுத்துக்கொண்டு உழைத்தான் அவன். அவனுடைய இரத்தம், அவனுடைய வியர்வை, அவனுடைய உழைப்பு-எல்லாவற்றையும் எந்த இடத்தில் சிந்திக் கொண்டிருந்தானோ அந்த இடம் சர்க் காருக்கு மனுப்போட்டுத் தீர்வைப் பணம் கட்டி வாங்கிய வெறும் மண்மட்டுமல்ல, அது அவன் பிறந்தமண்! ஒரு மாத உழைப்புக்குப்பின் அந்த நில்ம் நிலமாயிற்று. வெறும் மண் விளையும் மண்ணாயிற்று. காடாகக் கிடந்த பூமி கற்பகம் விளையும் கழனிகளாயிற்று. மொத்தமாக உழுது போட்ட பின் நிலப்பரப்பைத் தனித் தனிப் பிரிவுகளாக வரப்புக் கட்டிப் பிரித்தான். அருவியிலிருந்து அவன் தோண்டிக் கொண்டு வந்திருந்த வாய்க்கால், வயலின் நடுவில் இறுதி வரை வந்து இருபுறமும் நீர் பாய்ந்தது. வீட்டுக் கொல் லையில் குவிந்திருந்த குப்பையை வண்டி வண்டியாக ஏற்றிக்கொண்டு வந்து உழவில் சிதறினான். எடுத்த எடுப்பில் நன்செய்ப்பயிர்களைப் பயிரிடவேண்டாம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/286&oldid=597861" இலிருந்து மீள்விக்கப்பட்டது