பக்கம்:பிறந்த மண்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 - பிறந்த மண்

அவனுக்கு.வள்ளியம்மை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப்

போனாள்

அழகியநம்பி உழைக்கவில்லை! அவனுடைய உழைப்பை வெறும் உழைப்பென்று மட்டும் சொல்லிவிட முடியாது. மரத்தடியில் தவம் செய்யும் முனிவன்போல் மண்ணில்ஆற்றோரத்துப் புழுதியில்-உழைப்பு என்னும் யோகாசனத் தால் தவம் செய்துகொண்டிருந்தான் அவன். தண்டும் கமண்டலமும், ஏந்தும் முனிவர்போல் மண்வெட்டியும் கடப் பாரையும் ஏந்தினான் அவன். அவன் முகத்திலும் தாடி, மீசை, எல்லாம் காடு மண்டினாற்போல வளர்ந்துவிட்டன. தலையில் எண்ணெயும், சீப்பும் படிந்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட் டனவோ? அவனுடைய சுருள் சுருளான அழகிய கிராப்பு முடி.நெருப்புநிறத்தில் சடை விழுந்து தோன்றிற்று. புலன்களை அடக்கி உழைத்து இலட்சியத்தை நோக்கித். தவம் செய்யும் முனிவனாகத்தான் அவனும் இருந்தான்.

கிழக்கு வெளுக்கும் நேரத்தில் நிலத்தின் நடுவிலிருக்கும் பரண்மேல் ஏறி நின்றுகொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் நான்கு புறமும் ஒரே பசுமைப் பரப்பாகத் தெரிந்த தனது படுகையைப் பார்க்கும்போதெல்லாம் அவன் உள்ளம், பூரிக் கும். நம்பிக்கை பொங்கும். உழைத்த தோள்கள் உயர்ந்து விம்மும். எத்தனையோ காலமாக ஆற்று வண்டலைத் தேக்கிப் படியவைத்துக்கொண்டு மேடாகியிருந்த அந்தக் குறிஞ்சியாற்றுப் படுகை தன் நிலவளத்தையெல்லாம் அவன் உழைப்போடு சேர்த்து ஒத்துழைக்கச் செய்திருந்தது. பயிர்களின் எழுச்சியில், புடைத்து மேலெழும் பசுமையின் கொழிப்பில் அந்த ஒத்துழைப்பைக் காண முடிந்தது.

- ஒருநாள் அருணோதயத்தில் அவன் அப்படிப் புரண்மேல் * தின்றுகொண்டிருந்தபோது வட்டிக் கடைப் பன்னிர்ச்

செல்வமும் அவருடைய ஆட்களும் அந்தப் பாதையில் வந்து

கொண்டிருப்பதைப் பார்த்தான். மலையில் விறகு வெட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/288&oldid=597866" இலிருந்து மீள்விக்கப்பட்டது