பக்கம்:பிறந்த மண்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 r - பிறந்த மண்

பன்னீர்ச்செல்வம் அனுப்பிய ஆள், இந்தாங்க தம்பி! உங்களை ஐயா கூப்பிடுகிறார்”-என்று அவனருகே வந்து சொன்னான். 'வருகிறேன்; போ-என்று சொல்லிவிட்டு மண்வெட்டியோடு அவனுக்குப் பின்னால் நடத்தான் அழகியநம்பி. .

வாதம்பி உன் திறமையைப் பார்த்தேன். எனக்குக் கண் சுக்கிறது. இரண்டர்ை மாதத்துக்கு முன்னாலே வெட்ட வெளியாய்க் கிடந்த இடத்தை இப்படிப் பசுமை குலுங்கச் செய்துவிட்டாயே! நீ சாமர்த்தியக்காரன் தான் அப்பா! நான்கூட ஆரம்பத்தில் ஏதோ மட்டமாக நினைத் தேன். பைத்தியக்காரத்தனமாக நீ iணுக்கு உழைக்கிறாய் என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது. உன் உழைப் பின் அருமை’

"முகஸ்துதி, புகழ்ச்சி இவையெல்லாம் இப்போது எனக் குத் தேவை இல்லை. கூப்பிட்டனுப்பிய காரியத்தை முதலில் ச்ொல்லுங்கள், எனக்கு உங்களோடு நின்று பேசிக் கொன் டிருக்க நேரமில்லை. வேலை இருக்கிறது"- என்று அவரை இடைமறித்தான் அழகியநம்பி ஆளே மாறிப் போய்விட் பட்ாய்!உன்னைப் பார்த்தால் பழைய அழகியநம்பி மாதிரியே தெரியவில்லையே? அவன் இடைமறித்துக் கூறியதையும் அவனுடைய ஆத்திரத்தையும் அவசரததையும் பொருட் படுத்தாதவர்போலப்பேசிக்கொண்டே அவன் தோற்றத்தை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சிரித்தார் அவர். அழகியநம்பி முகத்தைச் சுளித்தான். * . . . .

பன்னிர்ச்செல்வம் தம்பக்கத்தில் இருந்த ஆட்களுக்கு ஏதோ ஜாண்ட காட்டினார். உடனே அவர்கள் துரத்தில் விலகிப்போய் நின்று கொண்டார்கள். ‘. .

உட்கார் தம்பி!” அவர் அவனிடம் ஏதோ அந்தரங்க விஷயம் பேசப் போகிறவரைப்போல் பக்கத்தில் ஆட்காரச்

சொல்லி உபசரித்தார், . . . . . . . . . ." . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/290&oldid=597871" இலிருந்து மீள்விக்கப்பட்டது