பக்கம்:பிறந்த மண்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பிறந்த மண்

இரைந்தே சொன்னான் அழகியநம்பி, அவர் போன மறுகணமே ஒரு திருஷ்டிப் பொம்மை கட்டி வயலுக்கு நடுவே நிறுத்தினான்.

இன்னொரு நர்ள் மணியக்கார நாராயணபிள்ளை. புலவர் ஆறுமுகம், முன்சீப் புன்னைவனம், கந்தப்பன்எல்லாரும் அருவியில் குளிப்பதற்காக மலையடிவாரத்துக்கு வந்திருந்தார்கள். குளித்துவிட்டுத் திரும்பிப் போவதற்கு முன் அழகியநம்பியின் காய்கறித் தோட்டத்தைப் பார்க்க வந்தனர்

என்ன ஐயா புன்னைவனம், ஏன் இப்படி மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படுகிறீர்! அன்றைக்கு உம்மிட மும், என்னிடமும் வந்து யோசனை கேட்டபோது கேலி செய்தோமே! இன்றைக்குப் பார்த்தீரா? புழுதி மண்ணாய்க் கிடந்த ஆற்றுப் படுகையைப் பொன் விளையும் பூமியாக்கி விட்டானே?”.என்று புன்னைவனத்தை நோக்கிக் கூறினார் நாராயணபிள்ளை -

'என்ன இருந்தாலும் படித்தவன் மூளையே தனி. எவ்வளவு அருமையாக யோசித்துத் திட்டமாக வேலை’ செய்திருக்கிற்ான் பார்த்தீர்களா? இத்தனை வருஷமாக் இந்த ஆற்றுப் படுகையை நாம் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்? நம்மில் ஒருத்தனுக்காவது இப்படிச் செய்ய வேண்டுமென்று புத்தியில் பட்டதா?'-என்றார் புலவர் ஆறுமுகம் > - "பையன் கூடிய சீக்கிரம் இதில் முன்னுக்கு வந்துவிடு வான் போலிருக்கிறதே!” என்றார் புன்னைவனம். கந்தப்பன் அந்தப் பசுமை வளத்தைப் பார்த்துப் புேச வாயின்றி நடந்து வந்து கொண்டிருந்தார்

தண்ணிர் பாய்கிற வாய்க்காலில் மண்சரியாமல் செப்ப னிட்டுக் கொண்டிருந்த அழகியநம்பி வயலுக்குள் கூட்ட மாகப் பேச்சுக்குரல் கேட்டுத் தலைநிமிர்ந்தான். அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/292&oldid=597876" இலிருந்து மீள்விக்கப்பட்டது