பக்கம்:பிறந்த மண்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

տո. பார்த்த்சாரதி 293

க்ளிலும் அதைச் செய், இதைச் செய்-என்று அழகியநம்பி யிடம் அதிகமாக வற்புறுத்திக் கொண்டிருக்கவில்ல்ல அவர். "உன்னால் முடிந்ததைச் செய்போதும்.நீ எது செய்தாலும் எனக்குச் சம்மத்ந்தான்”-என்று அவ்ன் இஷ்டப்படி விட்டு விட்ட்ார் அவர். . . .” - .

"இரண்டு கல்யாணங்களையும் ஒரே முகூர்த்தத்தில் ஒன்றாகச் சேர்த்தே நடத்திவிட்லாம்” என்று காந்திமதி ஆச்சி கூறினாள். எல்லாருக்கும் அந்த யோசனை சரி. யென்றே தேர்ன்றியது -

கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பமாயின. நாராயண பிள்ளையிலிருந்து புலவர் ஆறுமுகம் வரை குறிஞ்சியூரின் பிரமுகர்கள் எல்லாரும் தங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு ஒடியாடி வேலை செய்வதுபோல் அலைந்து ஏற்பாடுகனைக் கவனித்தனர். இரண்டு குடும்பங்களுள் நடைபெறும் ஒரு சாதாரணக் கலியாணமாக அது தெரியவில்லை. குறிஞ்சியூர் என்ற பெரிய குடும்பமே அந்தக் கலியர்ணத்தை ஆர்வத் தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

குறிஞ்சியூரில் அப்போது மனோரம்யமான பருவகாலம். ஊருக்குப்பன்னிர் தெளிப்பதுபோல் சாரல் பெய்து கொண்” டிருந்தது. அருவிகளில் தண்ணிர் பெருக்கெடுத்துப் பாய்ந் தது, சல்லாத் துணிக்குள்ளிருந்து வெட்கத்தோடு தலையை, நீட்டிப் பார்க்கும் மணப் பெண்போல் வெண்மேகப் படலங் களுக்கிடையே மலைச் சிகரங்கள் தெரிந்தன. ஏரிகள்: குளங்கள், ஆறுகள், ஓடைகள் அத்தனையும் நீர் நிரம்பி; நிமிர்ந்து கிடந்தன. எங்கும் பசுமை எங்கும் குளிர்ச்சி எங்கும் வளம்; உலகத்தின் மீாபெரும் இன்பங்களெல்லாம் அந்த மலைத்தொடருக்கு நடுவே வந்து ஒரு சிறிய கிராம மாக உருப்பெற்றிருப்பது போல் தோன்றியது.

இரண்டு கல்யாணத்துக்காகவும் அறிந்5af##, தெரிந்த வர்கள், உம்றார், உறவினர், விருந்தினர் வந்து கூடிக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/297&oldid=597888" இலிருந்து மீள்விக்கப்பட்டது