பக்கம்:பிறந்த மண்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 - பிறந்த மன்

டிருந்தனர்; முகூர்த்தத்துக்கு இன்னும் மூன்றே நாட்கள் இருந்தன. முருகேசன் குடும்பத்தார் மாப்பிள்ளை வீட்டா ருக்குரிய மரியாதைகளோடு ஒரு தனி வீட்டில் வந்து தங்கி யிருந்தனர். காந்திமதி ஆச்சியின் கடையில் இரண்டு கல்யா ணங்களுக்கும் போதுமான பட்சணங்களைச் சமையற் கார்ர்கள் இரவு பகலாகச் செய்து கொண்டிருந்தனர். தெருவை அடைத்துப் பெரிய பந்தல் போட்டாயிற்று. இரட்டை நாதஸ்வரத்துக்கு நல்ல மேளக்காரராகப் பார்த்துப் பேசி முன்பணம் கொடுத்தாயிற்று. வாசகசாலைக் கந்தப்பனும் புலவர் ஆறுமுகமும் சேர்ந்து மணமக்களுக்கு வாசித்தளிப்பதற்காக வாழ்த்துமடல் அச்சிட்டுக் கொண் டிருந்தார்கள்,

திருமணத்திற்கு முதல் நாள் காலை தன்னுடைய காய் கறிப் பண்ணையில் உருளைக்கிழங்குச் செடிகளுக்குத் துரரில் உரம் அணைத்துக்கொண்டிருந்தான் அழகியநம்பி. திடீ ரென்று கோமுவின் குரல் அங்கே கேட்டது. நிமிர்ந்து பார்த்தான். வயல் வரப்புகளின் மேல் கோமு ஓடிவந்து கொண்டிருந்தாள்.

என்ன கோமு என்ன சமாசாரம்? இவ்வளவு அவசர மாக ஓடிவந்தே?”- என்று கேட்டான் அவன்.

"மாமா! உங்களைத் தேடிக்கொண்டு யாரோ குடும்பத் தோடு வந்திருக்கிறார். அவர் பேசுவதைப் பார்த்தால் நம் பக்கத்து மனிதர் x- மாதிரியில்லை. நாராயண பிள்ளை என்னை அனுப்பினார். உங்களை உடனே கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்".என்றாள் கோமு. அழகிய நம்பிக்கு ஆச்சரியமாயிருந்தது "யாராயிருக்கலாம்?- என்று யோசித்துப் பார்த்தான்; தெரியவில்லை. ‘போய்ப் பார்த் தால் தானே தெரிகிறது-என்று கோமுவுடன் புறப்பட் டான். வீட்டை அடைகிறவரை ஓயாத சிந்தனையோடு தான் நடந்தான். வீட்டு வாசலில் வந்து தேடிவந்திருக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/298&oldid=597892" இலிருந்து மீள்விக்கப்பட்டது