பக்கம்:பிறந்த மண்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. பார்த்தசாரதி 45

நீரிலிருந்து கரையில் இழுத்துப் போட்ட மீன்போலத் துடித்தாள் பகவதி. அவளுக்குத் தூக்கம் வரவில்லை. தாயாரும் தங்கையும் அழகிய நம்பியைப் பற்றிய பேச்ச்ைக் கிளப்பியபோது அவனைப் பற்றித் தன் உள்ளத்தில் பொங்கிப் புலர்ந்து எழும் உணர்ச்சிகளைச் சொற்கள்ாக்கிக் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் போல ஒர் ஆர்வம் எழுந்தது. ஆனால் அவளுடைய வயசுக்கு அவள் அப்படிப் பேசிவிட முடியுமா? - - - பெண்ணுக்கு வயது வந்துவிட்டால் அவளுடைய உடலின் தூய்மையையும், உள்ளத்தின் தூய்மையையும் மட்டுமே சுற்றி இருப்பவர்கள் கவனிப்பதில்ல்ை அவளுடைய ஒவ்வொரு வாயச்ைவையும், ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கிறது சுற்றுப்புறம். ஒரு சொல்லில் அல்லது சொல்லின் பொருளில் கோணல் இருந்துவிட்டால், அல்லது இருப்பதாகத் தெரிந்தால், பெண்ணின் உணர்ச்சியி லேயே அந்தக் கோணல் இருக்க வேண்டுமென்று சுற்றுப் புறம் அனுமானிக்க முடியும்! பக்கத்திலே இருப்பவர்கள் , அந்நியர்களில்லை. தாயும் தங்கையும் தான் பக்கத்திலிருக் கிறார்கள். கல்ப்ாண்மாகாத வயசுப்பெண், கல்யர்ண் மாகாத வயசுப் பையனைப் பற்றி எத்தனை எத்தனையோ நளினமான சுவையுள்ள நினைவுகளை நினைக்க் முடியும். அருகிலிருப்பது தாயும் தங்கையுமானாலும்,நூறு வார்த்தை பேசினால் அதில் ஒரு வார்த்தையாவது அவளுடிைய அந்தரங்கத்தைக் காட்டிக் கொடுக்காமல் போய்விடாது. பகவதி பேசவில்ல்ை. பேசவேண்டியதையும் சேர்த்து “நினைத்தான்; கொள்ள்ை கொள்ளையாக நினைத்தாள். அத்தனை இன்ப நினைவுகளும் அவள் மனத்திலேயே மலர்ந்து அவள் மண்த்திலேயே உதிர்ந்தன. அந்த நினைவு ஏற்பட்டபோது அழகியநம்பியின் கைபட்ட இடமெல்கம் அவ்ஸ் உடலில் புல்லரித்தது. அவனுடைய கம்பிசமான தோற்றம், சிரிப்பு, கிொஞ்சும் கண்கள், அறிவொளி திகழும் நீண்ட முகம்-எல்லாம் பகவதியின் மனத்தில் சித்திரமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/47&oldid=596698" இலிருந்து மீள்விக்கப்பட்டது