பக்கம்:பிறந்த மண்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. உணர்வின் அலைகள்

கறுப்பு விரிப்பில் கை தவறிச் சிந்திய மல்லிகைப் பூக்களைப்போல் வானப்பரப்பு முழுதும் நட்சத்திரமணிகள் இறைபட்டுக் கிடந்தன. யானைத் தந்தத்தின் நுனிபோல் சிறிய பிறைச் சந்திரன் கருநீல வானத்தின் நெற்றிச் சுட்டி போல் அழகாக இருந்தது. அழகிய நம்பி கப்பலின் மேல் தளத்தில் நின்று கடலையும், வானத்தையும், அலைகளை யும், நட்சத்திரங்களையும் சேர்த்து ஒரு புதிய அழகை உருவாக்க முயன்று கொண்டிருந்தான். அலைகளின் ஒசை, கப்பல் செல்லும் பொழுது ஏற்பட்ட ஒலி, இந்த இரண்டும் அவன் மனத்தில் ஒருவகைக் கிளர்ச்சியை உண்டாக்கின. எந்த வேகமாகச் செல்லும் வாகனத்தில் சென்றாலும் அந்த வேகத்தில் அடுக்கடுக்கான உயரிய சித்தனைகள் சிலருக்கு ஏற்படும். கற்பனை வெளியில் எங்கோ, எதையோ நோக்கி உணர்வுக்கும் எட்டாததொரு பெரு வெளியில் பறப்பது போன்ற உணர்ச்சி, பஸ்ளில், இரயிலில், விமானத் தில் பிரயாணம செய்யும்போது சிலருக்கு ஏற்படும். இப்போது கப்பலில் செல்லும் போது அழகிய நம்பிக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டது.

அந்த ஆழ்கடலின் பேரலைகளைப்போல அவன் மனத்தில் எண்ணற்ற நினைவு அலைகள் மோதின. நடந் தவை, நடக்கின்றவை. நடக்க வேண்டியவை, நடக்க வேண்டுமென்று அவன் விரும்பியவை-எல்லாவற்றையும் வஞ்சகமின்றி நினைத்தது அவன் மனம், அந்தச் சிறிய கப்பல் சில பல பிரயாணிகளையும் ஏற்றுமதிச் சரக்கு களையும் மட்டும் கொண்டு செல்வதாக அவனுக்குத் தோன்றவில்லை. தனக்கே தெரியாத தன்னுடைய எதிர் காலத்தை நோக்கித் த்ன்னை இழுத்துக் கொண்டு போவது போல் தோன்றியது. .

பிரமநாயகம் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தான். கப்பலின் ஆட்டத்தைச் சகித்துக்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/49&oldid=596702" இலிருந்து மீள்விக்கப்பட்டது