பக்கம்:பிறந்த மண்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. புார்த்தசாரதி - 感3

துச் சொன்னான் அவன். அவளுக்கு எப்போதுமே அறு துறுப்பான் சுபாவம்'-என்று சொல்லி நகைத்தாள் க்ரில்லி, திடீரென்று அந்த வெள்ளைக்காரப் பெண் சிரித்துக் கொண்டே தன் அருகில் வந்து நின்றுகொண்டு இங்கிலீஷில் ஏதோ சொல்லவே பிரமநாயகத்துக்கு ஒன்றும் புரிய வில்லை. பரக்கப் பரக்க விழித்தார். அர்த்தமில்லாமல் சிரித் தார். சிரிப்பில் அசடு வழிந்தது. அவள் தன்னிடம் என்ன சொல்லுகிறாள் என்பது மட்டும் அவருக்கு விளங்கவில்லை. த்ளத்தின் ஒரத்தில் வில்லியோடு நின்றுகொண்டிருந்த அழகியதம்பி அவருடைய நிலையை விளக்கிக் கொண்டு அருகில் வந்தான். மேரி என்ன சொல்லுகிறாள்? என்பதை அவருக்குத் தமிழில் விளக்கினான். 'உங்களையும் என்னை யும் அவர்களோடு சேர்ந்து சாப்பிடவேண்டுமென்று சொல்லுகிறாள்” என்றான். அவன் கூறினதைக் கேட்டு விட்டு அவர் முகத்தை இலேசாகச் சுளித்தார். அழகிய நம்பியின் பக்கமாக நிமிர்ந்து உற்றுப் பார்த்தார்.

நாகரிகத்தையும், அன்பையும். தெய்வமாக மதிக்கும். களங்கமற்ற குழந்தை உள்ளம் படைத்த மேரிக்கு முன் னால் பிரமநாயகம் தன்னை அவமானப்படும்படி செய்து விடுவாரோ என்று பயந்தாள் அழகியநம்பி. பிரமநாயகத் தைப் போன்ற ஒரு மனிதர் அந்த மாதிரி நிலையில் பண் பாக, நாக்ரிகமாக நடந்து கொள்வார் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. - - -

'தம்ப் இந்த மாதிரிப் பழக்கவழக்கமெல்லாம் இப் போது வுேண்டாம். வ்ெஸ்ண்னக்காரப் பெண் பிள்ளைகள் இப்படித்தான் சிரித்துச் சிரித்துப் பேசி ஆளை மயக்கு, வார்கள். கடைசியில் குடி கெட்டுப்போகும்."-நல்ல ன்ெறன! பிரமநாயகம் தமிழில்தான் இப்படிச் சொன்னார். மேரிக்கும் லில்லிக்கும்தான் தமிழ் தெரியாதே "அதெல் இசம் ஒன்றுமில்லை. கம்மா பொழுது பூேர்வதற்காக.அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/55&oldid=596714" இலிருந்து மீள்விக்கப்பட்டது