பக்கம்:பிறந்த மண்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பிறந்த மண்,

களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு மரியாதைக்காக நம்மையும் சேர்த்துக் சாப்பிடக் கூப்பிடு கிறார்கள். நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக் கூடாது'- என்று பணிவான குரலில் பிரமநாயகத்துக்குப் பதில் சொன்னான் அழகிய நம்பி,

"அவர்கள் வெள்ளைக்காரப் பெண்கள். மாமிச உணவு சாப்பிடுவார்கள். கூப்பிடுகிறார்களே என்று மரியாதை யைப் பார்த்தால் நாமும் மாமிசம் சாப்பிட முடியுமா?-- பிரமநாயகம் சிறிது கோபத்துடன் இரைந்த குரலில் கேட்டார். -

உடனே அழகியநம்பிக்கும் அவர்களுடைய உணவைப் பற்றிய அந்தச் சந்தேகம் உண்டாயிற்று. பக்கத்தில் நின்று கொண்டிருந்த மேரியை நோக்கி, ‘மேரி எனக்கு ஒரு சிறு சந்தேகம், நாங்கள் மரக்கறி உணவு உண்பவர்கள்.நாங்கள் உங்களோடு உண்ணுவதானால்...?” என்று சொல்ல வந்ததை அரைகுறையாகச் சொல்லிவிட்டுக் கேள்விக்குறிப் போடு அவள் முகத்தைப் பார்த்தான்.

"ஓ! அந்தச் சந்தேகம் உங்களுக்குத் தேவையில்லை. இப்போது நாங்கள் சாப்பிடப் போவதும் உங்களுக்கு அளிக்கப் போவதும் நீங்கள் உண்ண முடிந்த உணவே. ரொட்டி, பழங்கள், வெண்ணெய், தேநீர் இவற்றில் எதுவுமே நீங்கள் மறுக்கக்கூடியவை அல்லவே?"-என்றாள் மேரி. அவள் சிரித்த சிரிப்பு இதயத்தைக் கவ்வியது. கடு கடுப்பாக இருந்த பிரமநாயகமே அந்தச் சிரிப்பில் நெகிழ்ந் தார். அவள் உணவைப் பற்றிக் கூறியதை அழகியநம்பி தமிழில் மொழி பெயர்த்து அவருக்குச் சொன்னான்.

'பரவாயில்லை தம்பி! நீ வேண்டுமானால் போய்ச் சாப்பிடு. எனக்குச் சோறு சாப்பிட்டுப் பழக்கமாகிவிட்டது.

இந்த நேரத்திற்கு ரொட்டி சாப்பிட்டு வயிறு நிறையாது. வற்புறுத்திக் கூப்பிடுகிறார்களே: மாட்டேனென்று சொல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/56&oldid=596716" இலிருந்து மீள்விக்கப்பட்டது