பக்கம்:பிறந்த மண்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ பிறந்த மண்

பெற்ற அட்டை ஒன்றை அவனிடம் நீட்டினாள். ஜே. வி. வோட் ஹவுஸ், வெள்ளவத்தை, அலெக்சாண்ட்ரியா வீதி'- என்று அவர்களுடைய தந்தையின் பெயரும் முக வரியும் அதில் இருந்தன. : "மறந்து விடாதீர்கள், கப்பல் பழக்கம் கப்பலோடு போயிற்று என்று நினைக்கக்கூடாது. நாம் அடிக்கடி சந்தித்துப் பழகவேண்டும். அளவளாவவேண்டும்’-இந்தச் சொற்கள் லில்லியின் வாயிலிருந்து வெளிவந்தபோது உணர்ச்சித் துடிப்பு உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொற்கள் வெளிவரும் போது இருக்குமே அந்தத் துடிப்பு இருந்தது. மேரி அன்போடு அவனருகே வந்து அவனுடைய இரண்டு. கைகளையும் தன் பட்டுக்கரங்களால் பற்றிக்கொண்டாள். "மறந்து விடமாட்டீர்களே அதற்கு மேல் அவளுக்குச் சொற்களே வாயில் வரவில்லை ரோஜா மொட்டுகளைப் போன்ற அந்த யுவதியின் செவ்விதழ்கள் துடித்தன. நான்கு விழிகள் அல்னுடைய இதய அந்தரங்கத்தையே துழாவுவது போல் அவன் முகத்தை ஊடுருவிப் பார்த்தன. "அதுசரி உங்கள் விலாசத்தை எங்களுக்குத் தரவில்லையே; சொல் லுங்கள். எழுதிக் கொள்கிறேன்”-என்று பையைத் திறந்து டைரியையும் பேனாவையும் கையில் எடுத்துக் கொண் டrள் மேரி, . . .

"இப்போது நான் போய். இறங்கப்போகும் விலாசத்தை நானே இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும். நான் மறுமுறை உங்களைச் சந்திக்கும்போது என் விலாசத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்-என்றான் அழகியநம்பி.

அவர்கள் இருவரும் விடைபெற்றுக் கொண்டு சென் றனர். அழகியநம்பி சிறிது நேரம் அவர்கள் சென்ற திசை யையே பார்த்துக்கொண்டு நின்றான். -

நன்றாயிருக்கிறதே தம்பி யாரோ கப்பலில் வந்தவர் ளோடு இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தால் உருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/58&oldid=596720" இலிருந்து மீள்விக்கப்பட்டது