பக்கம்:பிறந்த மண்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 61

அப்பப்பா! வியாபாரம் என்றால் இப்படியுமா ஒரு வியாபாரம்? தெரு ஓரங்களிலும் நடைபாதைகளிலும்கூட விலையுயர்ந்த பொருள்களை விற்கும் கடைகள் விலை யுயர்ந்த துணிமணிகளை எல்லாம் நடைபாதையில் குவித்துக் கொண்டு கூவிக்கூவி விற்றார்கள்.

அந்த நெருக்கடியில் த்ெருவில் நடந்து செல்வது காட் டாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்துவதுபோல் கடினமாக இருந்தது. பழக்கப்பட்ட பிரமநாயகம் வேகமாக நடந்தார். - அகியநம்பியால், முடியவில்லை. சோர்வும் தயக்கமும் நிறைந்த் குரலில் இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்?'-என்று முன்னால் நடந்து கொண்டிருந்த பிரமநாயகத்திடம் கேட்டான்.

'இதோ வந்துவிட்டதே; இந்த வீதியின் கோடியில் வவுப் புறமாகத் திரும்பினால் தென்சிறகில் முதல் கட்டடம் நம்முடைய கடைதான்"- என்றார் அவர். அழகியநம்பி அவர் சுட்டிக்காட்டிய திசையில் கண் பார்வை செல்லுந் தொலைவு வரை பார்த்தான். அந்த வீதியின் திருப்பத்தை அடைவதற்கே குறைந்த பட்சம் இன்னும் அரைமைல் தொலைவு நடந்தாக வேண்டும் போலிருந்தது. . . .

சிறிதைப் பெரிதாகவும், பெரிதைச் சிறிதாகவும், சமயத்துக்கு ஏற்றாற்போலச் சொல்லிச் சாதிக்கும் திறன் வியாபாரிக்கு வேண்டும். பிரமநாயகத்திடம் அந்த அம்சம் போதுமானவரை இருப்பத்ை அழகியநம்பி உணர்ந்தான். தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போதே எதிரே சந்தித்த ஒவ்வொரு மனிதரிடமும் விலைவாசிகள்,வியாபார நிலவரம் ஆகியவற்றைப் பொறுமையாக நின்று விசாரித்துக் கொண்டுதான் மேலே நடந்தார் அவர். வழியில் அவ்ரைச் சந்தித்த ஒவ்வொரு தெரிந்த மனிதரும் அவரைப் பேர்ல்வே வியாபார மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பதை அவர வரின் பேச்சிலிருந்து அழகியநம்பி அனுமானித்தான்.

'உலகத்தில் எங்கும் ஒவ்வொரு மனிதனும், ஆோல், டிணர்வு, சிந்தனை, செயல் ஆகிய யாவற்றாலும் ஒரு குறிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/63&oldid=596730" இலிருந்து மீள்விக்கப்பட்டது