பக்கம்:பிறந்த மண்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பிறந்த மண்

ஏதாவது பந்த பாசங்கள் இருந்தால் விடாப்பிடிவாகி, உள்ளுரில் ஒட்டிக்கொண்டு கிடக்கவேண்டியதுதான். ஆனால், அவர் அன்று தனி ஆள். இலாபமோ, நஷ்டமோ நம்முடைய அதிர்ஷ்டத்தை இன்னொரு தேசத்தில் போய்ப் பரிசோதித்துப் பார்க்கலாம்’-என்று துணிவாக நாலைந்து வருடங்களுக்கு முன் கப்பலேறியவர் இன்று இலட்சாதிபதி யாக விளங்குகிறார். - -

அவருக்குச் சொந்தமான கடைக்குள் நுழைந்த்போது பிரமநாயகத்துக்கு இந்தப் பன்ழய செய்திகள்ெல்லாம் நினைவுக்கு வந்தனவோ இல்லையோ, அழகியநம்பியின் நினைவுக்கு வந்தன. அவருடைய பழைய-புதிய நிலைகள்ை ஒப்பிட்டுப் பார்த்தான் அவன், ஒரே ஒரு சிறிய வ்ேறு பாட்டைத் தவிர வேறு எதுவும் அவனுக்குத் தோன்ற வில்லை. - - பிரமநாயகம் என்ற மனிதர் பேச்சில், எண்ணத்தில் செய்கையில், மனப்பான்மையில் எதிலும் நாலைந்து வருடங் களுக்குமுன்பிருந்ததைவிட இப்பொழுது மாறிவிடவில்லை. புதியது எதுவும் அவரிடம் சேர்ந்துவிட்டவில்லை. பழையது எதுவும் அவரிடமிருந்து போய் விடவில்லை. அவருக்காக அவருடைய இரும்புப் பெட்டியிலும் அவருடைய பெயரில் பாங்குகளிலும் சில இலட்சம் ரூபாய்கள் சேர்ந்து கிடந்தன. இந்த ஒரே ஒரு சிறிய மாறுதல்தான் பழைய தூத்துக்குடி பிரமநாயகத்திற்கும் புதிய கொழும்பு பிரமநாயகத்துக்கும் நடுவில் இருந்தது. பணம் என்ற அந்த மூன்றெழுத்துப் பொருளுக்கு உலகம் செய்கிற மரியாதைகள்-கைகட்டல், வாய்பொத்துதல், கும்பிடு, பயபக்தி-எல்லாம். அந்த மூன் தெழுத்துப் பொருள், குட்டிச்சுவருக்குப் பக்கத்திலே நிற்கும் வெட்டிக் கழுதையிடம் இருந்தால்கூட, உலகம் இதையெல்

லாம் செய்யும். - - - - - - .

இப்படி இன்னும் பலப்பல ஆத்திரம் மிக்க சிந்தனைகள் அழகியநம்பியின் மனத்தில் அந்தக் கடைக்குள் நுழைந்து

சுற்றிலும் பார்த்தபோது உண்டாயின, بہ’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/66&oldid=596736" இலிருந்து மீள்விக்கப்பட்டது