பக்கம்:பிறந்த மண்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 67

கொளுத்தி வைத்திருந்தார்கள் போலிருக்கிறது. கமகம' வென்று நறுமணம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. பிரமநாயகம் அவனை அழைத்துக்கொண்டு அந்த அறையை நோக்கி நடந்தபோது, கடைக்குள்ளிருந்த அத்தனை வேலை யாட்களின் கண் பார்வையும் அந்தப் பக்கமாகத் திரும்பிச் சில விநாடிகள் நிலைத்ததை அழகிய நம்பி கவனிந்துக் கொண்டான். வெறும் தற்செயலான் பார்வையாக மட்டும் அது அவனுக்குத் தோன்றவில்லை. அந்தப் பார்வைக்கு ஒருபொருள்-மறைபொருள் இருக்கவேண்டும். அந்தப் பொருள் என்னவென்று அப்போதே அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. தன் சுற்றுப்புறத்தை, தன்னைச் சுற்றி இருப்பவர்களை, ஒவ்வோர் அசைவி லும் உற்றுக் கவனிக்கும் பழக்கம் அழகியநம்பிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உண்டு, அந்தப் பழக்கத்தால் எவ் வளவோ சிறிய பெரிய நன்மைகளை அவன் அடைந்திருக் கிறான். * -

பிரமநாயகம் தன்னை அந்த முன்புறத்து அறைக்கு அழைத்துச் சென்றபோது அவருடைய நடையிலேயே ஒரு வகைத் தயக்கம் அல்லது பதற்றம் இருந்தது அவனுடைய பார்வைக்குத் தப்பவில்லை. அது மட்டுமல்லாமல் ஓரிரு கணம் தயங்கி நின்றார், அந்த அறை வாசலில், அப்போது அவர் முகச் சாயலையும் அதில் விரவிய சலனத்தையும்கூட அழகியநம்பியால் கவனித்துக்கொள்ள முடிந்தது. அறை யின் கதவருகே கடைகளின் செயலாளர் என்ற பொருளைத் தரும் ஸ்டோர்ஸ் செக்ரெட்டரி என்ற ஆங்கில எழுத் துகள் கண்ணாடியில் பிரேம் செய்து படம்போல் மாட்டப் பட்டிருந்தது. அதற்குக் கீழே சிறிய சிங்கள எழுத்துகளில் ஒரு பெயரும் எழுதியிருந்தது. சிங்களம் தெரியாத அவனுக்கு அந்தப் பெயர் என்னவென்றும் விளங்கவில்லை. தயங்கி நின்ற பிரமநாயகம் கதவருகே இருந்த மின்சார மணிக்குரிய பொத்தானை அமுக்கினார். அறையின் உட்புறம் மின்சார மணி ஒலிக்கும் ஓசைகேட்டது. மணி ஒலி அடங்குவதற்குள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/69&oldid=596742" இலிருந்து மீள்விக்கப்பட்டது