பக்கம்:பிறந்த மண்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 69

அன்ட்யாளம் கண்டுகொள்ள ஓரிரு விநாடிகள் பிடித்தன. கோடு கீறினாற் போன்ற கரும்புருவங்கள் உயர்ந்து நிமிர விழிகளை மலர்த்தி அவனைப் பார்த்தாள், ஒ.குயில் கூவுவதுபோல் இந்த ஒசையுடன் சாயம் பூசிய செவ் விதழ்கள் திறந்து மூடின. தற்செயலாகத் தெருக்கோடியில் நேர்ந்த அந்தச் சந்திப்பை அவள் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது.

பிரமநாயகம் அறைக்குள் நுழைந்த தும் அவள் மரியா தைக்காகவாவது எழுந்திருந்து நிற்பாள் என்று அழகிய நம்பி நினைத்தது 'வீணாயிற்று. சிரித்துக்கொண்டே மேஜைக்கு முன்னால் இருந்த இரண்டு நாற்காலிகளைக் காட்டினாள். அதிகாரம் செய்யவேண்டியவர் ஏன் அப்படி அடங்கி ஒடுங்கி அவளிடம் நடந்து கொள்கிறார் என்று அழகியநம்பிக்குப் புரியவில்லை, - -

பிரமநாயகம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். அவனை இன்னொரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். அவனும் உட்கார்ந்து கொண்டான், கையில் பிரித்துப் படித்துக் கொண்டிருந்த கடிதத்தை மடித்து வைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து, அவர்கள் இருவரையும் பார்த்தாள் அவள். - - - அவளுடைய அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்போல் பிரமநாயகம் பக்கத்தில் உ . கார்ந்திருந்த அவனைச் சுட்டிக்காட்டிச் சிங்கள மொழியில் அவளிடம் ஏதோ கூறினார். சிரித்துக்கொண்டே சிங்களத் தில் பதிலுக்கு அவரிடம் ஏதோ கேட்டாள் அவள்.அப்படிக் கேட்கும்போது தன் பக்கமாகக் கையைச் சுட்டிக்கர்ட்டிக் கேட்டதனால் அந்தக் கேள்வி தன்னைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று அழகியநம்பி நினைத்துக் கொண்டான்,

பிரமநாயகம் பதில் கூறினார். அதற்குப் பின் ஆவள் அவனிடம் நேரிடையாக ஆங்கிலத்தில் பேசத் தொடங்

  • . * , , கின்ாள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/71&oldid=596746" இலிருந்து மீள்விக்கப்பட்டது