பக்கம்:பிறந்த மண்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - ೨,055 LDGತಹ

"உங்கள் வரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக் கிறது. உங்கள் அன்பையும் ஒத்துழைப்பையும் நான் எப்

போதும் விரும்புகிறேன். உங்கள் பெயர்?"

"அழகியநம்பி" என்று பதிலைச் சுருக்கமாகக் கூறினான் அவன். -

'நல்லது! நாம் பின்பு சந்திப்போம். இப்போது எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது”-பேசிக்கொண்டே கடிதங் களைப் புரட்டத் தொடங்கினாள் அவள். அழகியநம்பி திகைத் தான். பேசத்தொடங்கிய விதமும், பேச்சை உடனடி யாகக் கத்தரித்து முடித்துக்கொண்ட விதமும் ஒன்றுக் கொன்று முரணாக இருந்ததுபோல் பட்டது.

அவன் நாற்காலியிலிருந்து எழுந் திருந்து விட்டான். பிரமநாயகமும் எழுந்துவிட்டார். எழுந்து நின்றுகெர்ண்டு சிங்களத்தில் அவளிடம் ஏதோ கேட்டார் அவர் அவ ருடைய அந்தக் குரல் அறைக்குள் வந்ததிலிருந்து ஏன் அப்படி அடங்கி ஒடுங்கி ஒலிக்கவேண்டும்? என்பதை நீண்ட நேரமாகச் சிந்தித்துக் குழம்பினான் அவன். ஒரு வேளை தன்னைப் பற்றிய பேச்சைத் தான் தெரிந்துகொள்ளக் கூடாதென்று அவர்கள் தனக்குத் தெரியாத மொழியில் பேசிக் கொள்கிறார்க்ளோ என்று அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

அழகியநம்பி நடப்பது ஒவ்வொன்றையும் உற்றுக் கவனித்துக் கொண்டே வந்தான். நாற்காலியிலிருந்து எழுந்: திருந்து பிரமநாயகம் கேட்ட கேள்விகளுக்கு அவள் கூறிய தில் அவனுக்குப் புரியவில்லையானாலும், அது ஒலித்த விதத்தில் கோபத்தின் சாயை, கடுமையின் குறிப்பு-இருந் ததுபோல் தோன்றியது அவனுக்கு. அந்தப் பதிலைக் கேட்டுவிட்டு, பிரமநாயகம் சிறிதுநேரம் விழித்துக்கொண்டு

நின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/72&oldid=596748" இலிருந்து மீள்விக்கப்பட்டது