பக்கம்:பிறந்த மண்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 73

தான் தெரிந்துகொள்ள முடியும். இந்தக் கொழும்பு நகரத் தைப் பார்த்தால் உங்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். அப்பப்பா! எவ்வளவு பெரிய நகரம். எத்தனை கப்பல்கள் துறைமுகத்தில்நின்றுகொண்டிருக்கின்றன! எவ்வளவுபெரிய கடைவீதிகள்!- சிறுவயதில் நர்ம்ெல்லாரும் சென்னையைப் பார்த்தது உங்களுக்கு நினைவிருக்குமென்று எண்ணுகிறேன். பணப்புழக்கத்தாலும் ஆரவார ஆடம்பரங்களாலும் சென்னையைவிட எவ்வளவோ பெரிய் நகரமாகத் தோன்று கிறது. இது.

'அடிக்கடி இங்குள்ள நிலவர்த்தைக் கடிதமூலம் உங்க ளுக்குத் தெரிவிக்கிறேன். வந்தவுடன் பணம் கேட்பது நன் றாக இருக்காது. இந்த மாத முடிவில் பிரமநாயகத்திடம் கேட்டுக் கொஞ்சம் பணம் வாங்கி அனுப்புகிறேன். ஊரில் கைச் செலவுக்குக்கூட ஒன்றுமில்லாமல் உங்களை வெறும் விட்டோடு வைத்துவிட்டு வந்திருப்பதை நினைத்தால் எனக்கு மன வருத்தம் உண்டாகிறது. நீங்களோ வள்ளி யம்மையோ என்னைத் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் கவலை கவலைதான்; கவனமாக வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

“காந்திமதி ஆச்சியிடமும் சொல்லி விட்டு வந்திருக் கிறேன். ஏங்கல் தாங்கலில், என்னவென்று விசாரித்து உதவி செய்வதற்கு உங்களுக்கு ஆள்கள் இல்லாமல் போய் விடவில்லை. பெருமாள் கோயில் மணியம் நாராயண பிள்ளை, புலவர் ஆறுமுகம், எல்லாரிடமும் அடிக்கடி விசா ரித்துக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத்தான் வந்தி ருக்கிறேன். நீங்கள்-தாயும் மகளும் என்னைப்பற்றி இல்லா ததை எல்லாம் நினைத்துச் சஞ்சலம் அடையக்கூடாது. நிம்மதியாக இருக்க வேண்டும். அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருங்கள். மற்றவை பின்பு. ப்தில் எதிர்பார்க் கிறேன். -

உங்களன் புள்ள, அழகியநம்பி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/75&oldid=596754" இலிருந்து மீள்விக்கப்பட்டது