பக்கம்:பிறந்த மண்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 75

கிறேன்' என்று ஒரு காகிதத்தையும் கடித உறையையும் அவனிடம் நீட்டினான் சோமு.

அதை வாங்கிக் கொண்டு அவனை உட்காரச் சொன் னான் அழகிய நம்பி. சோமு தமிழ்நாட்டிலிருக்கிற தன் மனைவி மக்கள், தாய், சகோதரி எல்லாரும் அடங்கிய குடும்பத்துக்கு எழுதுகிற கடிதம் அது. கடிதம் எழுதிக் கொடுக்கிற சாக்கில் படிப்பறிவில்லாத அந்தச் சமையற் காரனிடமிருந்து சில விவரங்களை விசாரித்து அறிந்து கொண்டான். அவன் விசாகிக்கத் தயங்கிய அல்லது விசா ரிக்க விரும்பாத சில விவரங்களை, சோமு தானாகவே கூறி னான்.

பிரமநாயகத்தின் கை செழித்து வியாபாரம் ஓங்கி நடக்கத் தொடங்கிய நாளிலிருந்து அவன் அவரிடம் சமையற்காரனாக இருக்கிறான். அந்த நாளிலிருந்து இன்று வரை அவனுடைய மாதச் சம்பள்ம் இருபது ரூபாய்க்குமேல் உயரவில்லை, சாப்பாடு தவிர இருபது ரூபாயும், வருடத் திற்கு இரண்டு ஜோடி வேஷ்டி துண்டுகளும் கொடுத்து வந்தார் பிரமநாயகம். சோமு சரியான பொறுமைசாலி. இல்லையானால் வளர்ச்சியடையாத குறைந்த சம்பளத் தொகையையும் பெற்றுக் கொண்டு பிரமநாயகத்தைப் போன்ற முன்கோபியிடம் தொடர்ந்து வேலை பார்த்துவர முடியுமா? - - -

“என்னவோ வயிற்றுச் செலவு போக இருபது ரூபா யாவது கிடைக்கிறது. பாருங்கள். நம்ம ஊரில் இருந்தால் அதற்கும் வழி இல்லையே; ஏதோ காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்-என்று சோமுவே அழகியநம்பியிடம் கூறினான்! அவனைப் போன்ற நிலையிலுள்ள ஒரு சராசரி மனிதன் வாழ அந்தப் ப்ொறுமை அவசியமென்றுதான் அழகியநம்பிக்குத் தோன்றியது. கடிதங்களைத் தபாலில் சேர்த்து விட்டு வருவதாக அவனிடம் கூறிவிட்டுப் புறப்புட் டான் சோமு. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/77&oldid=596758" இலிருந்து மீள்விக்கப்பட்டது