பக்கம்:பிறந்த மண்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பிறந்த மண்

சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று அறையின் கதவுகளை அடைத்துத் தாழிட்டுவிட்டு வந்தார் அவர். அறைக்குள்ளே மங்கிய இருட்டுப் படர்ந்தது. ஸ்விட்ச் இருந்த இடத்தைத் தடவி மின்சார விளக்கைப் போட்டார். செய்கிற முன்னேற் பாடுகளையும், முன்னெச்சரிக்கையையும் பார்த்தபோது அவர் சொல்லப் போகிற செய்தி முக்கியமானதாகவும், பரம இரகசியமாகவும் இருக்கவேண்டுமென்று எண்ணிக் கொண்டு வியந்தான் அழகிய நம்பி.

பிரமநாயகம் உள்ளே வந்து அவனிடம் கூறிய விரிவான செய்திகள் தாம் மேலே கூறப்பட்டவை. இந்த இரகசியங் களைப் பேசி முடித்துக்கொண்டு அவர்கள் அறைக்கு வெளியே வந்தபோது மாலை மூன்று மணி. அதற்குள் சமையற்காரச்சோமு தபாலாபீஸிலிருந்து திரும்பி வந்து காப்பி, சிற்றுண்டி தயாரித்திருந்தான். காபி, சிற்றுண்டியை அருந்திவிட்டுச் சமையற்கார சோமுவுக்குக் கீழ்வரும் கட்டளையைப் பிறப்பித்தார் பிரமநாயகம்.

சோமு! நீ ஒன்று செய்! தம்பியோடு போய் ஊரைச் சுற்றிக் காட்டிவிட்டுக் கடற்கரையில் சிறிது நேரம் இருந்து விட்டு வா. வந்தபிறகு இராத்திரிச் சமையலுக்கு அடுப்பு மூட்டினால் போதும். தம்பி ஊரெல்லாம் பார்க்க வேண்டும் அல்லவா?” - -

ஆகட்டும் அய்யா!'- என்றான் சோமு. 'தம்பீ! அழகு! எனக்குக் கொஞ்சம் கடை வியாபார சம்பந்தமான வ்ேலைகள் இருக்கின்றன. இவ்வளவு நாட்களாக ஊரில் இல்லாததால் அவற்றை இன்றே கவனிக்கவேண்டும். இல்லையானால் தானே உன் கூடச் சுற்றிக் காட்டுவதற்கு வரலாம்’-என்று அழகியநம்பியை நோக்கிக் கூறினார் அவர். அதனாலென்ன? பரவாயில்லை. நான் சோமு வையே அழைத்துக்கொண்டு போய்வருகிறேன்"- என்று 'தன்னடக்கமாக அவருக்குப் பதில் கூறிவிட்டான் அவன். பிரமநாயகம் கடைக்குள் சென்றார். அழகியநம்பி வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/82&oldid=596768" இலிருந்து மீள்விக்கப்பட்டது