பக்கம்:பிறந்த மண்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி §5

ஓசையைப் போல் நகரத்தின் ஒலிகள் தொலைவில் சிறிதும் பெரிதுமாக ஒலித்தன. தங்கச் சிலைகளைப்போல் குழந் தைகள், வாளிப்பான உடற்கட்டோடு, இளங் கணவரோடு கைகோத்துத் தழுவினாற்போல வரும் வெள்ளை யுவ திகள், அடக்க ஒடுக்கமாகக் குத்துவிளக்கு போலக் கணவ னுக்குப் பக்கத்தில் நடந்து வரும் தமிழ்ப் பெண்கள்,சிங்கள மங்கையர்,-எல்லாரும் அந்தக் கடற்கரையின் புல் தரைக்கு அழகு கொடுத்தனர்.

அழகியநம்பியும் சோமுவும் கூட்டம் அதிகமற்ற ஒரு பகுதியில் போய் உட்கார்ந்து கொண்டனர். முந்திரிப்பருப்பு விற்கும் சிங்களப் பையன் கடல் அலையின் சத்தத்தையும் மீறிக்கொண்டு தன் சத்தம் ஒலிக்க வேண்டுமென்ற எண்ணத் தினாலோ என்னவோ, கஜ்ஜிக்கொட்டை கஜ்ஜிக் கொட்டை' (கஜ்ஜிக்கொட்டை என்றால் சிங்களத்தில் முந்திரிப்பருப்பு என்று பொருள்) என்று தொண்டை கிழியக் கத்திக்கொண்டே அவர்கள் உட்கார்ந்திருந்த பக்கம்ாக வந் தான்.சோமு அவனை அருகில் கூப்பிட்டுக் காசைக் கொடுத்து இரண்டு முந்திரிப்பருப்புப் பெர்ட்டலங்கள் வாங் கினான். ஒன்றை அழகியநம்பியிடம் கொடுத் தான். அதை அவன் வாங்கி அந்தப் பொட்டலத்தைப் பிரித்து முந்திரிப் பருப்பை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

“ஹலோ..”-இனிமையோடு இழைந்த பெண் குரல்கள் இரட்டையாகச் சேர்ந்து ஒலித்தன. அழகியநம்பி தலை நிமிர்ந்து எதிரே பார்த் தான். தூய வெண்ணிறக் கவுன் அணிந்த தோற்றத்தோடு மேரியும் வில்லியும் சிரித்துக் கொண்டு நின்றனர். 'வாருங்கள்! வாருங்கள்! நல்ல சம யத்தில் நல்ல இடத்தில்தான் உங்களை சந்திக்கிறேன்” - அழகியநம்பி எழுந்து நின்று அவர்களை வரவேற்றான். அவன் முகம் மலர்ச்சியடைந்தது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/87&oldid=596778" இலிருந்து மீள்விக்கப்பட்டது