பக்கம்:பிறந்த மண்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 89

தில்லை. நீங்களே இப்படிக் கோபித்துக் கொண்டு சத்தம் போட்டால் நாங்கள் என்ன செய்வது? ” - -

ஒரு பெண் தன் சாமர்த்தியத் தாலும் வாழ்க்கை அனு பவங்களாலும் என்னென்ன பதில்களையும் சமாதானங் களையும் சொல்ல முடியுமோ, அவ்வளவையும் சொல்விச் சமாளிக்க முயன்றாள் அந்த அம்மாள். குடும்ப வாழ்க்கை யின் மேடுபள்ளங்களை நன்கு அறிந்து வாழ்க்கை அனுப வங்களில் தோய்ந்தவர்களால் மட்டுமே இந்த மாதிரி நிலை களைச் சமாளிக்க முடியும்.

உடல் உழைப்பை அறியாத அந்த வளமான சரீரம், இரக்கம், பச்சாதாபம் போன்ற உணர்வுகளை எல்லாம் பணத்தைப் போலவே இரும்புப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிடுவதுண்டு. காலுக்குச் செருப்பு, தலைக்குக் குடை , கடன் தஸ்தாவேஜிகளும் பத்திரங்களும் அடங்கிய ஒரு துணிப்பை, மல்வேஷ்டி, மல்சட்டை, கையகலத்துக்குச் சரிகைக் கரைபோட்ட அங்கவஸ்திரம்; பன்னீர் செல்வம் தோற்றத்தில்கூடத் தாம் அசல் சீமான், பச்சைப் பணக் காரர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் காட்சியளித்தார்.

"உங்களுக்கு ஆயிரம் துன்பங்கள் இருக்கலாம். அதை யெல்லாம் பற்றி நான் கவலைப்பட முடியாது. போனால் போகிறதென்று இன்னும் பதினைந்து நாள் தவணை கொடுக்கிறேன். அதற்குள் வட்டிப் பணம் ஐநூறு ரூபா யாவது கைக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் நான் மிக வும் பொல்லாதவனாக இருப்பேன்’-கொடுத்த கடனை வசூலிப்பவர்களுக்கே உரிய விதத்தில் வெட்டு ஒன்று,துண்டு இரண்டாகப் பேசினார் அவர்.

அந்தச் சமயத்தில் வள்ளியம்மை உள்ளேயிருந்து வந்த் தாய்க்குப் பின்னால் நின்றாள். பன்னீர்செல்வத்தின் பார்வை அத்தப் பக்கமாகத் திரும்பியது, "அது யாரு? உங்களுக்குப் பின்னாலே நிற்கிறது? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/91&oldid=596786" இலிருந்து மீள்விக்கப்பட்டது