பக்கம்:பிறந்த மண்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - பிறந்த மண்

புக்குப் போனது தெரியாது போலிருக்கிறது. இங்கே இருப்பதாக நினைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார்.”

"இரண்டையுமே, படியேன். கேட்கலாம்."-தாயின் விருப்பப்படியே இரண்டு கடிதங்களையுமே படித்துக் காட்டத் தொடங்கினாள் மகள். - -

11. நெஞ்சம் நிறைகிறது

அம்மா! அம்மா! இதோ பார் கடிதம். யார் எழுதி யிருக்கிறார்கள் தெரியுமா?"-கை நிறையத் தங்கக்கட்டி களை அள்ளிக்கொண்டு மகிழ்ச்சியால் கூவுகிறவள்போல் கூவிக்கொண்டே வாசலிலிருந்து ஓடிவந்தாள் கோமு,

கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த காந்திமதி ஆச்சி யும், அடுப்பிலிருந்து இட்விக் கொப்பரையை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பகவதியும் வியப்படைந்து திரும் பிப் பார்த்தனர். வாசல் பக்கமிருந்து கோமு கையில் ஒரு கடிதத்துடன் தரையில் கால் பாவாமல் துள்ளி ஓடிவந்து கொண்டிருந்தாள். . - .

“என்னடி இது; குதிப்பும் கும்மாளமும் ? தடுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டாலன்றி உனக்குப் புத்தி வராது கடிதம் வந்தால்தான் என்ன? இப்படியாகுதிக்க வேண்டும்! இன்னும் குழந்தைப்புத்தி மாறவே இல்லையே?. அதுசரி யார் போட்ட கடிதம் அது”.காந்திமதி ஆச்சி தாய்க்கு உரிய பெர்றுப்போடு சிறுமி கோமுவைக் கடிந்து கேட்டாள். . . .

"இல்லை. அம்மா வந்து.இதுவந்து.இலங்கையிலே. இருந்து அழகியநம்பி மாமா போட்டிருக்கிறார்"-என்று சொல்லிக்கொண்டே சிறுமி. கோமு தாயின் கட்டில்ருகில் வத்த நின்றான். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/96&oldid=596796" இலிருந்து மீள்விக்கப்பட்டது