பக்கம்:பிறந்த மண்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 95

அடுப்படியில் நின்றுகொண்டிருந்த பகவதியின் முகம் மலர்ந்தது."எங்கே, கோமு! அதை இப்படிக்கொடு பார்க் கலாம்’-என்று ஓடிவந்து கோமுவின் கையிலிருந்து ஆவல்ோடு அந்தக் கடிதத்தைப் பறித்துக்கொண்டாள் பகவதி. -

"இந்தப் பிள்ளைக்குத்தான் என்ன, ஒட்டுத்ல் பாரேன்? ஊருக்குட் போய்ச் சேர்ந்ததும், சேராததுமாக மறக்காமல் கடிதம் போட்டிருக்கிறானே!’ என்று பெருமிதம் தொனிக் கச் சொல்லிக்கொண்டான் ஆச்சி. அவளுடைய முகத்தில் தனிப்பட்டதொரு மகிழ்ச்சி அப்போது நிலவியது.

'அக்காவுக்கு எவ்வளவு ஆசை பார்த்தாயா அம்மா? மாமா கடிதத்தை நான் முழுக்கப் படிப்பதற்குள் பாதியி லேயே தட்டிப் பிடுங்கிக்கொண்டு விட்டாள்’-என்று செல் ல்மாகச் சிணுங்கிக்கொண்டே தாயிடம் புகார் செய்தாள் கோமு. -

நீங்கள் இரண்டுபேரும்-அக்காவும் தங்கையும்மட்டும் -படித்தால் போதுமா? எனக்குப் படித்துக்காட்ட வேண் பர்மா? சுகமாகப் போய்ச் சேர்ந்தேனென்று எழுதியிருக்கி றானோ; இல்லையோ?" - - -

'கடிதமே உன் பெயருக்குத்தான் அம்மா போட்டிருக் கிறார்!’-கோமு, ஆச்சியிடம் கூறினாள்.

முகத்தில் மலர்ச்சி, இதழ்களில் நளினமான மென்முறு வில், கண்களில் உணர்ச்சியின் மென்மையானதோர் ஒளி: உடலில் பூரிப்பு-அழகியநம்பியின் கடிதத்தைப் படிக்கும் - போது பகவதிக்கு இத்தனை மெய்ப்பாடுகளும் உண்டாயின. அத்தனைக்கும் அந்தக் கடிதத்தில் இருந்ததெல்ல்ாம் நாலைந்து வாக்கியங்கள்தான். அவள் அவற்றை இரண்டு மூன்று தடவையாவது திரும்பத் திரும்பப் ப்டித்திருப் பாள். அப்புறமும் அவளாகக் கொடுப்பதற்கு மனமின்றித்

தான் கையில் வைத்துக் கொண்டிருந்தாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/97&oldid=596798" இலிருந்து மீள்விக்கப்பட்டது