பக்கம்:பிறந்த மண்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பிறந்த மண்

ஆனால், சிறுமி கோமு சும்மா விடவில்லை! கொடு அக்கா! இன்னும் நீயே வைத்துக் கொண்டிருந்தால் நான் படிக்க வேண்டாமா? அம்மாவுக்குப் படித்துக்காட்ட வேண் டாமா? -என்று அக்காவிடமிருந்து வலுவில் பறித்தாள். 'பக்வதியும், கோமுவும் சுகமாக இருக்கிறார்களா? அவர்கள் இருவருக்கும் என் அன்பை மறக்காமல் சொல்லவும்"என்று எழுதியிருந்த வாக்கியங்களை மழலை மாறாத குரலில் இரண்டுமுறை திரும்பத் திரும்பப் படித்தாள். அவள். - .

"என்னடி கோமு? இதையே திரும்பத் திரும்பப் படிக் கிறாயே! இந்தக் கடுதாசியில் இதைத் தவிர வேறு ஒன்றுமே எழுதவில்லையா?”-என்று பொய்க் -கோபத்துடன் சலித்துக் கொண்டாள் ஆச்சி. உடனே கோமு முழுவதையும் படித்துக் காட்டிவிட்டு, அம்மா உடனே பதில் போடு: என்று இதில் அழகிய நம்பி மாமா எழுதியிருக்கிறாரே, நாம் அவருக்குப் பதில் எழுதிப் போட வேண்டாமா? இப்போதே தபாலாபீசுக்கு ஒடிப்போய்க் கார்டு வாங்கிக்கொண்டு வரட்டுமா?’-என்று கேட்டாள். -

"அவசரமெனன இப்போது? நாளைக்குக் காலையில் எழுதிப் போடலாம்’-என்று சிறுமியின் ஆசைத் துடிப்புக்கு அணை போட்டாள் தாய். - -

என்ன ஆச்சி? உள்ளே ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருப்பதைப் பார்த்தால் கடைக்குச் சாப்பிட வரும் வாடிக் கைக்காரர்கள் பேசாமல் வாசலோடு திரும்பிப் போய்விட வேண்டியதுதான் போலிருக்கிறது’-என்று கேட்டுக் கொண்டே பெருமாள் கோயில் குறட்டு மணியம் நாராயண' பிள்ளை உள்ளே நுழைந்தார். -

"அடடே! மணியக்காராா? வாருங்கள், வாருங்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை. இந்தா,கோமு ஐயா உட்காருவதற்கு ஒரு பலகை எடுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/98&oldid=596800" இலிருந்து மீள்விக்கப்பட்டது