பக்கம்:பிறந்த மண்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ர். பார்த்தசாரதி .. 9ኝ

போடு, இட்லி எடுத்து வை. "-என்று, ஆச்சி நாராயண

பிள்ளையை வரவேற்றாள். . . . -

நாராயண பிள்ளை உட்கார்ந்தார். அவர் ஆச்சிக்குத் தன்மையான மனிதர். வேண்டியவர். அந்தக் குறிஞ்சியூரில் கண்ணியம் நாணயமும் பொருந்திய மனிதர்கள் என்று அவள் மனத்தளவில் மதித்துவந்த சிலருள் முக்கியமான ஒருவர். -

'வேறொன்றுமில்லை. இந்த முத்தம்மாள் அண்ணி பிள்ளை அழகியநம்பி கொழும்புக்குப் போயிருக்கிறானோ இல்லையோ? 'சுகமாக வந்து சேர்ந்தேன், உங்கள் சுகத் துக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருக்கவும் என்று. கடிதாசி எழுதியிருக்கிறான், அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்ததனால் நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை” -என்று ஆச்சி கூறினாள்.

"ஆமாம். ஆமாம்! அழகியநம்பிதானே? கப்பலேறப் போவதற்கு முன்னால் மறந்து விடாமல் தேடிவந்து சொல்லிக் கொண்டு போனானே, நல்லபிள்ளை”-என்று இலையில் ஆவி பறக்கும் இட்லிகளைப் பிட்டுக்கொண்டே பதில் சொன்னரர் நாராயண பிள்ளை. -

"பாவம் முத்தம்மாள் அண்ணி! இதுநாள்வரை பட். துன்பங்கள் இனிமேலாவது விடியும். பிள்ளை அக்கரைச் சிமைக்குச் சம்பாதிக்கப் போயிருக்கிறான். மாதாம்ாதம் ஏதாவது அனுப்பினானானால் கடன்களையும் அடைத்து விடுவாள். அதோடு போய்விடவில்லை. கல்யாணத்திற்கு ஒரு பெண் வேறு வைத்துக் கொண்டிருக்கிறாள்.'

'ஊம் முன்காலம் மாதிரியா ஆச்சி? சமஸ்தானம் போல நிலம் கரைகள் இருந்தது. பிள்ளைகள் கையை எதிர் பார்க்காமல், உத்தியோகச் சம்பாத்தியத்தில் ஆசை வைக் காமல் குடும்புக் காரியங்கள் அது அது அப்போதைக்கப் போது தாராளமாக நடந்துகொண்டிருக்குமே, இப்போ

பிட்ட7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/99&oldid=596802" இலிருந்து மீள்விக்கப்பட்டது