பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் அதிகாரம் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் கி. பி. 957-970 அரிஞ்சயன் இறந்த பின்னர், அவன்மகன் இரண் டாம் பராந்தக சோழன் கி. பி. 957-ல் சோழ இராச்சியத் திற்குச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றான். இவன், அவ்வேந்தற்கு வைதும்பராயன் மகள்பாற் பிறந்த அரச குமாரன் ஆவன். பெற்றோர்கள் இவனுக்கிட்ட பெயர் பராந்தகன் என்பதேயாகும். இவன் பேரழகுடையவனா யிருந்தமை பற்றிச் சுந்தர சோழன் என்னும் பெயரைப் பின் னர் எய்தினன் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியப் படுகிறது 1. . இவனை, ' மதுரை கொண்ட கோஇராசகேசரிவர்மன் 2 எனவும் ' பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் ஸ்ரீ சுந்தர சோழதேவர் 3 ' எனவும் கல்வெட்டுக்கள் கூறுகின் றன. புதுக்கோட்டை இராச்சியத்தில் கொடும்பாளூரில் காணப்படுங் கல்வெட்டொன்றில் இவன் ' மதுராந்தகன் சுந்தர சோழன் ' என்றுங் குறிக்கப் பெற்றுள்ளனன். இவற்றை எல்லாம் கூர்ந்து நோக்குங்கால் , சுந்தர சோழன், தன் பாட்டனாகிய முதற்பராந்தக சோழன் ஆட்சிக்குட்பட்டிருந்து பிறகு நீங்கிப்போன பாண்டி நாட்டை மீண்டுங் கைப்பற்றும் பொருட்டுப் பாண்டிய னோடு போர்புரிந்து வெற்றிபெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகிறது. சுந்தர சோழன் காலத்தில் பாண்டி நாட்டில் மதுரை மா நகரில் வீற்றிருந்து அரசாண்டவன் இராசசிம்ம பாண்டி 1. Ep. Ind., Vol. XV, No. 5, Verse 26 2. S. I. I., Vol. III, Nos. 115, 116, 117 and 118. 3. Ep. Ind., Vol. XII, No. 15 ; Ins. 302 of 1908. 4. Inscriptions of the Pudukottai State, No. 82.