பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் 77 இனி, சுந்தர சோழனும் தன் தந்தையைப்யோல் வடக்கேயுள்ள திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டை நாட்டையும் கைப்பற்றித் தன் ஆளுகைக்குள் கொண்டு வரவேண்டும் என்று எண்ணினான். அதனை நிறைவேற்றும் பொருட்டு அந்நாடுகளிலிருந்த இராஷ்டிரகூடர்களின் பிரதிநிதிகளோடு இவன் போர்புரிந்து வெற்றியும் எய்தி னான். இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு முதல் இவன் கல்வெட்டுக்கள் தென்னார்க்காடு, வட ஆர்க்காடு, செங்கற் பட்டு ஜில்லாக்களில் காணப்படுகின்றன 1, அன்றியும், இவன் பிரதிநிதியாகத் தொண்டை நாட்டிலிருந்த பார்த்தி வேந்திரவர்மன் கல்வெட்டுக்களும் அப்பக்கங்களில் உள் ளன. இந்நிலையில் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாங் கிருஷ்ணதேவன் கல்வெட்டுக்களும் கி. பி. 967 வரையில் அந்த ஜில்லாக்களில் சில ஊர்களில் காணப்படுகின்றன. ஆகவே சுந்தரசோழன் அவ்விரு நாடுகளையும் கைப் பற்றுவதற்குச் செய்த முயற்சி சிறிது சிறிதாகச் சில ஆண்டு களில் நிறைவேறியதுபோலும். அந்த நிகழ்ச்சிகளைக் கால வரையறையுடன் தெளிவாக அறிய இயலவில்லை. எனினும், கி. பி. 963-ஆம் ஆண்டிலேயே தொண்டை நாட்டுப் பகுதிகள் இவன் ஆட்சிக்குட்பட்டு விட்டன என்று ஐயமின்றிக் கூறலாம்.3 இவனுக்குப் பராந்தகன் தேவியம்மன், வானவன் மாதேவி என்னும் இரு மனைவியர் இருந்தனர். அவர் களுள் பராந்தகன் தேவியம்மன் ஒரு சேரமன்னன் புதல்வி யாவாள்.4 மற்றொரு மனைவியாகிய வானவன் மாதேவி என்பாள் திருக்கோவலூரிலிருந்த மலையமானாட்டுச் சிற் S. I. I., Vol. III, Nos. 114, 115, 116, 117, and 118 Ep. Ind., Vol. IV, No. 48. 2. S. I. I., Vol. III, Nos. 152 to 198. 3. Ep. Ind., Vol. VI, p. 331. 4. S. I. I., Vol. V, No. 723: ' பொன்மாளிகைத் துஞ்சினதேவர் தேவியார் சேரமானார் மகளார் பராந்தகன் தேவியம்மனார்.'