பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலச் சோழர் சரித்திரம் றரசன் மகள்.! இவனுக்கு ஆதித்த கரிகாலன், அருண் மொழிதேவன் என்ற இரு புதல்வரும் குந்தவை என்னும் ஒரு புதல்வியும் இருந்தனர். அவர்களுள் ஆதித்த கரி காலன் இளைஞனாயிருந்தபோதே வீரபாண்டியனைப் போரிற் கொன்றான் என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் கூறு கின்றன. சுந்தரசோழன் தன் மூத்த புதல்வனது வீரச் செயலை யும் ஆற்றலையும் உணர்ந்து கி. பி. 966-ல் அவனுக்கு இளவரசுப் பட்டங்கட்டினான். மற்றொரு மகனாகிய அருண் மொழிதேவன் என்பவனே பின்னர் எத்திசையும் புகழ் பரப்பி இனிது வாழ்ந்த முதல் இராசராசசோழன் ஆவன். குந்தவைப் பிராட்டி வல்லவரையன் வந்திய தேவனுக்கு மணஞ்செய்து கொடுக்கப் பெற்றனள் 3. அவ்வரசகுமாரன் வேங்கி நாட்டில் வாழ்ந்த கீழைச்சளுக்கியர் மரபின னாதல் வேண்டும்.4 அவன் குந்தவையை மணந்த பிறகு சோழ நாட்டிலேயே தங்கிவிட்டனன் என்று தெரி கிறது. மழநாட்டு அன்பில் என்னும் ஊரினனாய அநிருத்த பிரமாதி ராஜன் என்பான் சுந்தர சோழனுக்கு அமைச்ச னாக இருந்தான். அவனுக்குத் திருவழுந்தூர் நாட்டி லுள்ள கருணாகர மங்கலம் என்னும் ஊரினை இறையிலி யாக இவ்வேந்தன் வழங்கினான். இது குறித்து அளிக்கப் பெற்ற செப்பேடுகள் அன்பிற் செப்பேடுகள் எனப் படும். இதுகாறுங் கிடைத்துள்ள சோழ மன்னரது செப் 1, S. I. I., Vol. VII, No. 863. 2. Ep. Ind., Vol. XXII, No. 34, Verse 28. 3. S. I. I., Vol. II, No. 6. ' ஸ்ரீ இராசராச தேவர் திருத்தமக்கை யார் வல்லவரையர் வந்தியதேவர் மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்' 4. வல்லவர் என்று தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப் பெற்றவர்கள் சளுக்கியரும் இராஷ்டிரகூடருமே யாவர். ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற வல்லவரையன் கீழைச் சளுக் கிய வேந்தன் ஆவன்.