பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 உத்தம சோழன் வெட்டுக்களால் இவ்வரசன் காலத்திலிருந்த அரசியல் அதிகாரி ஒருவனது வரலாறு அறியப்படுகின்றது. அவன் குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் நக்கனான விக்கிரம சோழ மாராயன் என்பான். அவன் உத்தம சோழனுடைய பெருந்தரத்து அதிகாரிகளுள் ஒருவன். அவன் குவளாலமுடையான் என்று தன்னைக் கூறிக் கொண்டிருத்தலால், அவன் முன்னோர்கள் கங்க மண்ட லத்திலுள்ள குவளால புரத்திலிருந்து வந்து பழுவூரில் தங்கியவராதல் வேண்டும். அவன், அரசனால் வழங்கப் பட்ட விக்கிரம சோழமாராயன்2 என்ற பட்டம் பெற்ற வனாக இருத்தல் அறியத்தக்கது. அத் தலைவன் கோவந்த புத்தூரிலுள்ள திருவிசயமங்கை என்ற சிவன்கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து அதற்கு நிவந்தமாக நெடுவாயில் என்னும் ஊரையும் நூறுகழஞ்சு பொன்னையும் அளித் திருப்பது' அவனது சிவபத்தியின் மாண்பை இனிது புலப்படுத்தும். அவ் விக்கிரமசோழ மாராயன் முதல் இராசராச சோழன் ஆட்சிக்காலத்திலும் இராசராசப் பல்லவரையன் என்னும் பட்டம் பெற்று உயர் நிலையில் இருந்துள்ளான் என்று தெரிகிறது. இனி, உத்தம சோழன், தன் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிய அம்பலவன் பழுவூர் நக்கனுக்கு விக்கிரம 1. தமிழ்ப்பொழில் ஏழாந்துணரில் யான் வெளியிட்டுள்ள இக் கல்வெட்டுக்களைக் காணலாம் (துணர் 7. பக். 296 - 303) 2. பண்டைத் தமிழ் வேந்தர்கள் தம் அரசியல் அதிகாரிகளுள் தக்கோர்க்குப் பட்டம் வழங்கிப் பாராட்டுவது பழைய வழக்கம் என்பது ' மாராயம் பெற்ற நெடுமொழி' என் னும் வஞ்சித்திணைக்குரிய துறையொன்றால் அறியப் படுகின்றது. 3. தமிழ்ப்பொழில், துணர் 7 பக்கங்கள் 297, 299, 300. 4. Ins. 160 and 163 of 1929.