பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பிற்காலச் சோழர் சரித்திரம் சோழமாராயன் என்னும் பட்டம் அளித்திருத்தலால் இவ் வேந்தனுக்கு விக்கிரம சோழன் என்ற மற்றொரு பெயரும் இருந்திருத்தல் வேண்டும். அன்றியும், இவனை மதுராந் தகன் என்றும் அக்காலத்தில் வழங்கியுள்ளனர் என்பது ‘ஸ்ரீ மதுராந்தக தேவரான உத்தம சோழ தேவரைத் திருவயிறுவாய்த்த உடையபிராட்டியார்! ' என்னும் கல் வெட்டுப் பகுதியினால் நன்கறியக்கிடக்கின்றது. நடுவில் புலியுருவம் பொறிக்கப்பெற்றதாயும் ஓரத்தில் உத்தமசோழன் என்று வடமொழியில் வரையப்பெற்ற தாயுமிருந்த ஒரு பொற்காசு? உத்தமசோழன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பெற்று வழங்கிவந்தது என்று சர் வால்ட்டர் எலியட் என்னும் அறிஞர், * தென்னிந்திய நாணயங்கள்' என்னும் தம் நூலில் கூறியுள்ளனர். இப் போது கிடைத்துள்ள சோழ மன்னர் நாணயங்களுள் அதுவே மிகப் பழமை வாய்ந்தது என்பது ஆராய்ச்சி யாளர்களின் கருத்து. நாட்டில் யாண்டும் அமைதி நிலவ, மக்கள் எல்லோரும் எத்தகைய துன்பங்களுமின்றி இனிது வாழ்ந்து வருமாறு செங்கோல் செலுத்திக்கொண்டிருந்த உத்தம சோழனும் கி. பி. 985-ஆம் ஆண்டில் இறந்தான். இவனுக்குப்பிறகு சுந்தரசோழன் புதல்வனாகிய முதல் இராசராச சோழன் முடி சூட்டப்பெற்றனன். இனி, உத்தம சோழனுடைய அரும்பெற லன்னையாகிய செம்பியன் மாதேவியின் வரலாற்றையும் சமயத்தொண்டை யும் ஈண்டுச் சுருக்கமாக எழுதுவதும் ஒருவகையில் ஏற்புடையதேயாம். 1. S. I. I., Vol, III, No. 147. 2. Coins of Southern India by Sir Walter Elliot, p. 132. 3. The Colas, Vol. I, p. 194.