பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினர் என்றும் அது முதல்தான் இராசராசன் எனவும் இவன் வழங்கப்பெற்றனன் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளருள் சிலர் கூறியுள் ளனர்.1 அஃது எவ்வாற்றானும் ஏற்றுக்கொள்ளத் தக்க தன்று. தில்லையம்பலத்திற்கு இராசராசன் திருப்பணி புரிந் தமைக்குரிய சான்றுகள் கல்வெட்டுக்களில் யாண்டும் காணப்படவில்லை. அன்றியும், இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டாகிய கி. பி. 988-ஆம் ஆண்டிலேயே இவனுக்கு இராசராசன் என்னும் பெயர் வழங்கியது என்பது திருச்செங்காட்டங்குடி, திருமால்புரம் என்னும் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களால் ' அறியக் கிடக்கின்றது.. இவனது ஆட்சியின் நான்காம் ஆண்டில் திருவெண்காட்டிலும்' ஐந்தாம் ஆண்டில் திருவேதிகுடி, திருவிசலூர் என்னும் ஊர்களிலும், ஆறாம் ஆண்டில் திருச்சோற்றுத் துறையிலும் வரையப்பெற்றுள்ள கல் வெட்டுக்கள் இவனை இராசராசன் என்றே கூறு கின்றன. அவற்றை யெல்லாம் ஆராயுமிடத்து, இவ் வேந்தன் தான் அடைந்த வெற்றி காரணமாக, கி. பி. 988-ஆம் ஆண்டிலேயே இராசராசன் என்னும் பெயரை எய்தினன் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, அவ் வாராய்ச்சியாளர் கருத்து ஒரு சிறிதும் பொருந்தாமை காண்க. தன் சிறிய தாதையாகிய உத்தம சோழன் ஆட்சியில் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்றிருந்த இவ்விளங்கோ, அவன் இறந்த பின்னர், கி. பி. 985-ஆம் ஆண்டில் முடி சூட்டப்பெற்று அரியணை ஏறினான். பிற்காலச் சோழ மன்னர்கள், ஒருவர் பின்னொருவராக மாறிமாறிப் புனைந்து 1. S. I. I., Vol. II, Introduction, pp. 13 & 14. 2. Ins. 56 of 1913 : Ins. 306 of 1906. 3. S. I. I., Vol. V, No. 982, 4. Ibid, No. 625; Ins. 19 of 1907. 5. Ibid, No. 610. 6. Mysore Gazetteer, Vol. II, part II, page 943.