பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 103 அவ்வாறு நடத்தியமைக்குக் காரணம் யாது என்பது இந்நாளில் புலப்படவில்லை. அக்கொடுஞ் செயல்களை யுணர்ந்த இராசராசசோழன் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு சேர நாட்டிற்குச் செல்வானாயினன். அங்ஙனம் செல்லுங்கால் பாண்டி நாட்டைக் கடந்து செல்வது இன்றி யமையாததாயிற்று. பாண்டியன் அமரபுயங்கன் என்பான் சேரனுக்குச் சிறந்த நண்பன் ஆவன். எனவே, அவன் படையுடன் வந்து இராசராசனை எதிர்த்தான். அதுபோது நிகழ்ந்த போரில் இவன் பாண்டியனைப் புறங்கண்டு தன் படையுடன் சேர நாட்டை யடைந்தான். கடற்கரைப் பட்டினமாகிய காந்தளூர்ச்சாலையில் சேர மன்னனுக்கும் சோழ மன்னனுக்கும் பெரும் போர் நடைபெற்றது. அப் போரில் சேரமன்னனுடைய கப்பற் படைகள் அழிந்து போயின. பின்னர், இராசராசசோழன் தன் தூதன் சிறையிடப்பெற்றிருந்த உதகைக்குப் படையுடன் சென் றான். உதகை என்பது திருவாங்கூர் இராச்சியத்தி லுள்ள கல்குளந் தாலூகாவில் நாகர்கோயிலுக்கு வட மேற்கேயுள்ள ஒரு நகரமாகும். அஃது அக்காலத்தில் மாபெரும் மதில்கள் சூழ்ந்ததாய் மாளிகைகளும் சூளிகை களும் தன்பாற்கொண்டு உயரிய கோபுரங்கள் அமைந்த வாயில்களையுடையதாய்ச் சேரர்க்குரிய சிறந்த நகரங் களுள் ஒன்றாக நிலவியது. அந்நகர்க்குத் தன் படை யுடன் சென்ற இராசராசசோழன், அங்கு எதிர்த்த சேரன் படையைப் போரிற் புறங்கண்டு அதிலிருந்த கோட்டை மதில்கள், கோபுரங்கள், மாளிகைகள் முத லானவற்றைத் தன் படைகளால் தகர்ப்பித்து எஞ்சிய வற்றை எரிகொளுவிச் சூறையாடினான். அங்குச் சிறை 1. Travancore Archaeological Series, Vol II, page 5. - சூழி (a) மதகயத்தால் ஈரொன் பதுசுரமு மட்டித் துதகையைத்தீ யுய்த்த உரவோன்' (இராசராச சோழன் உலா, வரிகள் 40-42)