பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 111 னருவா என்னும் நகரம் சன நாதமங்கலம் 1 என்று பெயரிடப்பெற்றுச் சோழர்க்குத் தலை நகராக வைத்துக் கொள்ளப்பட்டது. இதற்குமுன் ஈழமண்டலத்தின்மீது படை யெடுத்துச் சென்ற தமிழ் வேந்தர்கள் அதன் வடபகுதியை மாத்திரம் கைப்பற்றுவதைத் தம் குறிக்கோளாகக் கொண்டி ருந்தனர். இராசராசன் அம்மண்டலம் முழுவதையும் கைப் பற்றித் தன் ஆட்சிக்குட்படுத்தவேண்டும் என்று எண்ணிய படியால் பழைய தலை நகரை விடுத்து நாட்டின் நடுவணுள்ள பொலன்னருவா என்னும் ஊரைத் தன் தலை நகராக அமைத்துக்கொண்டான் என்பது ஈண்டு அறியத்தக்கது. பிற்காலத்திலிருந்த சிங்கள வேந்தனாகிய முதல் விசயவாகு என்பவன் அநுராதபுரத்தில் முடி சூட்டப்பெற்றனனாயினும் அவன் தலை நகரமாகக்கொண்டு அரசாண்ட நகரம் பொலன் னருவா என்பதேயாம். இனி, ஈழமண்டலம் இராசராச சோழன் ஆட்சிக்குட் பட்டிருந்தது என்பதற்கு அந்நாட்டிலேயே பல சான்றுகள் உள்ளன. கொளும்பு மாநகரில் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பெற்றுள்ள கருங்கற்பாறையொன்றில் ' சோழ மண் டலத்து க்ஷத்திரிய சிகாமணி வள நாட்டு வெளா நாட்டுச் சிறு கூற்ற நல்லூர்க்கிழவன் தாழிகுமரன் ஈழமான மும்முடி சோழ மண்டலத்து மாதோட்டமான ராசராசபுரத்து எடுப்பித்த ராச ராச ஈஸ்வரத்து மகாதேவர்க்குச் சந்திராதித்தவல் நிற்க' 2 என்று தொடங்கும் ஒரு கல்வெட்டுக் காணப்படுகின்றது. அக்கல்வெட்டால் சோணாட்டுத் தலைவன் ஒருவன் ஈழ மண்ட லத்தில் மாதோட்ட நகரத்தில் தன் நாட்டு வேந்தன் பெயரால் இராசராசேச்சுரம் என்னும் சிவாலயம் ஒன்று எடுப்பித்து, அதற்கு அர்த்தயாம வழிபாட்டிற்கும் வைகாசித் திருவிழா விற்கும் நிவந்தமாக இறையிலி நிலம் அளித்த செய்தி புலனாகின்றது. அன்றியும், ஈழ மண்டலம் இராசராசன் 1. S. 1. I., Vol, IV, No. 1388. 2. Ibid, Vol. IV, No. 1412.