பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பிற்காலச் சோழர் சரித்திரம் களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராகக் கொண்டும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்' என்று கூறுகின்றது 1. அன்றியும், அத்தகைய வீரனை நாட்டை விட்டு ஓடும்படி செய்தவன் சத்தியாசிரயன் என்று அக் கல்வெட்டுப் புகழ்ந்து கூறுகின்றது. இதனால், இராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் இவன்மகன் இராசேந்திரன் மேலைச் சளுக்கிய நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று வென்று வந்த செய்தி உறுதியாதல் காண்க. ஆனால், பகைப்புலத் தரசன் கல்வெட்டில் காணப்படும் அத்துணை அழிவு வேலை களைச் சோழ இராச குமாரனாகிய இராசேந்திரன் செய் திருக்கமாட்டான் எனலாம். அப்போரில் சோழர்கள் வெற்றிபெற்றுப் பெரும் பொருளுடன் திரும்பினரேயன்றி அந்நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளவில்லை என்பது திண் ணம். சோழ மன்னரின் கல்வெட்டுக்கள் அந்நாட்டில் காணப்படாமையே இச்செய்தியை நன்கு வலியுறுத்துகின் றது. மேலைச் சளுக்கிய நாட்டுப் போர்க்களத்தில் இராசேந் திரன் ஆணையின்படியே, சத்தியாசிரயன் ஏறியிருந்த யானையைக் குத்தி வீழ்த்த முயன்ற ஊற்றத்தூர்ச் சுருதிமான் நக்கன் சந்திரனான இராசமல்ல முத்தரையன் என்னும் வீரன் இறந்தனன் என்று திருச்சிராப்பள்ளி ஜில்லா ஊற்றத்தூரி லுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது 2. அப்போரில் இராசராசன் வெற்றி யெய்தியமைபற்றித் தஞ்சைப் பெரிய கோயிலில் தட்சிணமேருவிடங்கர்க்குப் பொற்பூக்கள் வழங்கி யுள்ளான் 3. அப்போரின் இறுதியில் துங்கபத்திரையாற் றிற்குத் தெற்கேயுள்ள நாடுகள் இராசராசசோழன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன எனலாம். - இராசராசன் மெய்க்கீர்த்தியில் இவன் வேங்கை நாடு கொண்டமையும் குறிக்கப்பட்டுளது. வேங்கை நாடு என்பது கிருஷ்ணை கோதாவரி ஆகிய இரு பேராறுகளுக்கும் 1. Ep. Ind., Vol. XVI, page 74. 2. Ins. 515 of 1912. 3. S. I. I., Vol. 1], page 7.