பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 117 வின் வட பகுதியிலிருந்தவை ஆகும்', முதற் பராந்தக சோழன் அவற்றைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்கு உட்படுத்தி யிருந்தான். அவனது ஆட்சியின் பிற்பகுதியில் நிகழ்ந்த இராஷ்டிரகூடர் படையெடுப்பினால் சோழ மன்னர்கள் அவற்றை இழக்கும்படி நேர்ந்தது. இராசராச சோழன் அவற்றைக் கைப்பற்றும் பொருட்டு கி. பி. 991-ஆம் ஆண்டில் தஞ்சாவூர்க் கூற்றத்துக் குருகாடியுடையான்? பரமன் மழபாடி யானான மும்முடிச் சோழன் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பினான். அப் படையெடுப்பின் பயனாக, சீட்புலி நாடும் பாகி நாடும் இராசராச சோழன் ஆட்சிக்குள்ளாயின. அப்போர் நிகழ்ச்சி திருவாலங்காட்டுச் செப்பேடுகளாலும் சக்தி வர்மனது பபுபற்றுச் செப்பேடுகளாலும் அறியப்படுகிறது. காஞ்சிபுரத்திலுள்ள இராசராசன் ஆட்சியின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் அச் செய்தியை யுணர்த்துகின்றது . அன்றியும், நெல்லூர் ஜில்லாவிலுள்ள ரெட்டிபாளையத்தில் காணப்படும் இராசராசன் ஆட்சியின் எட்டாம் ஆண்டுக் கல்வெட்டொன்று அந் நிலப்பரப்பு இவன் ஆட்சிக்குட் பட்டிருந்தது என்பதை நன்கு புலப்படுத்துகின்றது. இராசராச சோழன் வேங்கி நாட்டிற்குத் தெற்கேயுள்ள சீட்புலி பாகி நாடுகளை வென்று கைப்பற்றிய பிறகு கீழைச் சளுக்கிய மன்னனாகிய சக்திவர்மனுக்கு அவன் நாட்டைப் பெறுமாறு உதவிபுரிவது எளிதாயிற்று. ஆகவே கி. பி. 999-ஆம் ஆண்டில் இராசராசன் வேங்கி நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று ஜடாசோட வீமனைப் போரில் வென்று சக்திவர்மனை வேங்கி நாட்டிற்கு வேந்தனாக முடி 1. சித்தூர் ஜில்லா, மதனபள்ளி தாலூகாவில் சிப்பிலி என் னும் ஊர் ஒன்று உளது. (Inscriptions of the Madras Py-Nellore 239.) 2. Ins. 79 of 1921., S. I. I., Vol. XIII, Nos. 149 and 150. 3. S. I. I., Vol. III, No. 205, Verse 82. 4. Ins. 79 of 1921. 5. Nellore Inscriptions, p. 446.