பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சராச 125 முதல் இராசராச சோழன் அக்கோயிலின் திருப்பணி இவ் வேந்தனது ஆட்சியின் 19-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 23-ஆம் ஆண்டில் பெரும்பாலும் நிறைவேறிவிட்டது என்று தெரிகிறது. இவன் ஆட்சியின் 25-ஆம் ஆண்டு 2-ஆம் நாளில் தூபித்தறியில் வைப்பதற்குப் பொற்றகடு வேய்ந்த செப்புக் குடம் கொடுக்கப்பட்டிருத்தலால் அக்காலத்தில் தான் திருப்பணி முடிவுற்றுக் குடமுழுக்காகிய கடவுண்மங்கலமும் நடைபெற்றிருத்தல் வேண்டும். எனவே, அந்நிகழ்ச்சி கி. பி. 1010-ஆம் ஆண்டில் நடைபெற்றதாதல் வேண்டும். பிறகு, இவன் தன் ஆட்சியின் 16-ஆம் ஆண்டு 20-ஆம் நாளில் அக்கோயில் விமானத்தில் கல்வெட்டுக்கள் வரை தற்குக் கட்டளையிட்டிருப்பதும் 2 அவ்வாண்டிற்கு முன் அத்திருப்பணி முடிவெய்தியிருத்தல் வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. அக் கோயிலிலுள்ள முதற் கோபுர வாயிலாகிய திருத்தோரணவாயில் கேரளாந்தகன் வாயில் 3 எனவும் இரண்டாம் வாயிலாகிய திருமாளிகைவாயில் இராசராசன் வாயில் எனவும் அந்நாளில் வழங்கி யுள்ளன ; அக்கோயில் விமானம் தட்சிணமேரு என்று வழங்கியது. கோயிலின் வெளித் திருச்சுற்றிலுள்ள நந்தி ஒரே கல்லில் அமைக்கப்பட்டது. அது பன்னிரண்டடி உயரமும் பத்தொன்பதரை அடி நீளமும் எட்டேகாலடி அகலமும் உடையது. கோயில் திருச்சுற்றில் பழைய அடியாராகிய சண்டேசுவரர்க்கும் நந்திக்கும் இடங்கள் அமைக்கப்பட்டிருந்தனவேயன்றி வேறு தெய்வங்கட்கு இட மின்மை அறியற்பாலதாம். இனி, இராசராசேச்சுரமுடைய பெருமான் மீது இராச ராசன் காலத்தவரான கருவூர்த்தேவர் என்னும் பெரியார் . S. I. 1., Vol. II, No. 1, 2. Ibid, Vol. II, page 2. 3. Ibid, Page 96. 4. Ibid, pp. 227 and 332. 5. Ibid, page 7. 6. The Great Temple at Tanjure, page 12,