பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 131 ஊர்ச்சபையாரும் தத்தம் கடமைகளை ஒழுங்காக நிறை வேற்றி வந்தமையால் இவன் ஆட்சியில் குடிகள் எல் லோரும் இனிது வாழ்ந்து கொண்டிருந்தனர். பயிற்சி பெற்ற சிறந்த தரைப்படைகளும் கடற்படைகளும் இவ் வேந்தன்பால் மிகுதியாக இருந்தமையோடு அவற்றை நடத்தற்குத் தகுதியும் ஆற்றலும் வாய்ந்த பல படைத் தலைவர்களும் இருந்தனர். ஆதலால், சோழ இராச்சியத் தில் பிறவேந்தர் படையெழுச்சி இவன் ஆட்சிக்காலத்தில் நிகழவே இல்லை. ஆகவே, இவன் இராச்சியத்திலிருந்த மக்கள் எல்லோரும் பகையரசர்களால் ஏற்படும் படை யெழுச்சி முதலான எத்தகைய இன்னல்களுமின்றி இன் புற்று வாழ்ந்துவந்தனர் என்பது தேற்றம். இனி, தஞ்சைமா நகரில் இராசராசன் எடுப்பித்த திருக்கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்தவர்களுள் இவன் மனைவிமார்களும் காணப்படுகின்றனர். அச் செய்திகளை யுணர்த்துங் கல்வெட்டுக்களை ஆராயுங்கால் இவனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என்பது புலனாகின்றது. அவர்களுள் பட்டத்தரசியாக விளங்கியவள் உலோகமா தேவியாவாள். அவளுக்குத் தந்தி சக்திவிடங்கி என்னும் வேறொரு பெயரும் உண்டு. அவ்வம்மையே இம்மன்னன் வாழ்நாள் முழுமையும் பட்டத்தரசியாக இருந்தனள் என்பது இவன் தன் ஆட்சியின் 29-ஆம் ஆண்டில் திருவிய லூர்க் கோயிலில் துலாபாரம் புகுந்தபோது அவ்வரசியும் இரணியகருப்பம் புகுந்துள்ளமையால் தெள்ளிதின் உண ரப்படும். அம்முதற் பெருந்தேவி தஞ்சைமா நகர்க்கு வடக்கேயுள்ள திருவையாற்றில் ஐயாறப்பரது கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் உலோகமாதேவீச்சுரம் என்னும் கோயில் ஒன்று எடுப்பித்து அதன் வழிபாட்டிற்கு நிவந்தங்களும் அளித்துள்ளனள் . அஃது இந்நாளில் 1. ' உடையார் சீராசராசதேவர் நம்பிராட்டியார் தந்திசக்தி விடங்கியாரான ஸ்ரீ ஒலோகமாதேவியார் வடகரை இரா சேந்திரசிங்க வள நாட்டுப் பொய்கை நாட்டுத் திருவை யாற்றுப்பால் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோகமா