பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xv

ஆங்கிலத்தில் எழுதியுள்ள சோழர் சரித்திரமும் புலவர் பெரு மக்கள் ஆராய்ந்து பதிப்பித்துள்ள சில தமிழ் நூல்களும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கனவாம். யான் சில ஊர்கட்குச் சென்று நேரில் கல்வெட்டுக்களைப் படித்து அறிந்துவந்த செய்திகளும் எனது ஆராய்ச்சியில் புதியனவாகக் கண்ட வரலாற்றுண்மைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

எனக்கும் பிற ஆராய்ச்சியாளர்க்கும் கருத்து வேறு பாடுகள் நிகழும் இடங்களில் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்து என் முடிபினை நிறுவியுள்ளேன். இது போன்ற சரித்திர நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டாதலும் எதிர் காலத்தில் புதியனவாகக் கிடைக்கும் ஆதாரங்களால் சில செய்திகள் மாறுபட்டுப் போதலும் சில நிகழ்ச்சிகளின் காலக் குறிப்புக்கள் வேறுபடுதலும் இயல்பேயாம்.

வரலாற்றாராய்ச்சி செய்வோர்க்குப் பயன்படுமாறு இச் சரித்திர நூலின் இறுதியில் சோழமன்னர்களின் மெய்க்கீர்த்தி களும், பழைய நூல்களிலும் உரைகளிலும்கண்ட அவர் களைப் பற்றிய பாடல்களும், சோழமன்னர்களின் மரபு விளக்கமும் சேர்க்கைகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்நூல் எழுதுவதற்கு ஆதாரமாகவுள்ள பன்னூல்களை யும் வெளியிட்டுள்ள பேரறிஞர் எல்லோர்க்கும் எனது நன்றி என்றும் உரியதாகும்.

தில்லையம்பதிக் கணித்தாகப் பெரும் பொருட்செலவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவியும் அதில் சர். கூர்மா வேங்கடரெட்டித் தமிழாராய்ச்சிக் கழகம் அமைத்தும் மக்களது கல்வி வளர்ச்சிக்குச் சிறந்த தொண்டு புரிந்த தமிழ்வள்ளல் காலஞ்சென்ற டாக்டர் இராசா சர். மு. அண்ணாமலைச் செட்டியார், LL. D. அவர்கட்கும், இந்நூல் எழுதுவதற்கு எனக்கு அன்பு கூர்ந்து அனுமதி