பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பிற்காலச் சோழர் சரித்திரம் களுள் ஒருவன் ; இவ்வேந்தன் ஆணையின்படி தஞ்சைப் பெரிய கோயிலின் திருச்சுற்று மாளிகையை எடுப்பித்தவன். இச்செய்தியை யுணர்த்தும் மூன்று கல்வெட்டுக்கள் அக் கோயில் பிராகாரத்தில் மூன்று இடங்களில் வரையப்பட்டிருக் கின்றன . அம்மூன்றும் ஒரே கல்வெட்டின் படிகளேயாம். இப்படைத்தலைவன் இராசராசன் ஆட்சியின் பிற்பகுதியில் திருமந்திர ஓலை நாயகமாகவும் இருந்தனன் என்பது ஆனை மங்கலச் செப்பேடுகளால் அறியப்படுகிறது . இவன் அரசனால் வழங்கப்பெற்ற மும்முடி சோழ பிரம மாராயன் என்னும் பட்டம் பெற்றவன் ஆவன். 2. பரமன் மழபாடியானான மும்முடி சோழன் :- இவன் தஞ்சாவூர்க் கூற்றத்துக் குருகாடி என்னும் ஊரினன்; இராச ராசனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன்; இம்மன்னன் விரும்பியவாறு நெல்லூர் ஜில்லாவிலுள்ள சீட்புலி நாடு பாகி நாடு என்பவற்றின் மேல் படையெடுத்துச்சென்று அவற்றைக் கைப்பற்றியவன் . இவன், தான் அங்கிருந்து கொணர்ந்த திறைப் பொருள்களுள் தொளாயிரம் ஆடுகளைக் கச்சிப்பேட்டு ஐஞ்சந்தி துர்க்கையார்க்கு இராசராசன் திரு நாமத்தால் பத்து நுந்தா விளக்குகளுக்கெனச் சாவாமூவாப் பேராடு களாக அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 4. 3. சேனாபதி குரவன் உலகளந்தானான இராசராச மாராயன் :- இவன் இராசராச சோழன் படைத்தலைவருள் ஒருவன்; அரசன் ஆணையின்படி கி. பி. 1001-ஆம் 1. 'உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் திருவாய்மொழிந்தருள இத்திருச்சுற்று மாளிகை எடுப்பித்தான் சேனாபதி சோழமண்டலத்து உய்யக்கொண்டார் வள நாட்டு வெண்ணாட்டு அமண்குடியான கேர ளாந்தகச் சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீ கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரம மாராயன்.' (S. I. I., Vol II, Nos. 31, 33 and 45) இக்கல் வெட்டில் காணப்படும் அமண்குடி இந்நாளில் அம்மங்குடி என வழங்குகிறது. 2. Ep. Ind., Vol. XXII, No. 34. 3. Ins. 79 of 1921. 4. S. 1. I., Vol, XIII, Nos. 149, 150.