பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 139 ஆண்டில் சோழ இராச்சியம் முழுவதையும் அளந்து எவ் வளவு நன்செய் புன்செய்களும் காடுகளும் உள்ளன என் பதைத் தெளிவாகப் புலப்படுத்தி அவற்றுள் விளை நிலங் களுக்கு மாத்திரம் வரி விதிக்குமாறு ஏற்பாடு செய்த வன்.! இவன் இராச்சியம் முழுமையும் அளந்தமைபற்றி இவனுக்கு உலகளந்தான் இராசராச மாராயன் என்ற பட்டம் இராசராசனால் வழங்கப்பட்டிருத்தல் அறியத் தக்கது. 4. மதுராந்தகன் கண்டராதித்தன் :- இவன் இராச ராசன் சிறிய தந்தையாகிய உத்தமசோழன் புதல்வன் ; இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் கோயில்களைக் கண் காணித்து அவற்றில் தவறிழைத்தவர்களைத் தண்டித்து அவை நல்ல நிலையில் இருக்குமாறு பாதுகாத்துவந்த பெருமையுடையவன். சில கோயில்களின் வருவாய்களை ஆராய்ந்தபோது அக்கோயில்களில் நாள் வழிபாடுகள் முறைப்படி நடைபெறுவதற்கு அவற்றிற்கு அளிக்கப் பெற்றிருந்த நிவந்தங்கள் போதாமை கண்டு இன்றியமை யாமைக்கேற்ப இவன் புதிய நிவந்தங்களும் அரசாங்கத் தில் வழங்கும்படி ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத் தக்கதொன்றாம், திருவிசைப்பாவில் ' மின்னாருருவம்' என்று தொடங்கும் கோயிற்பதிகம் பாடியுள்ள கண்ட ராதித்தன் இவனே என்று சிலர் கூறுவது பொருத்தமில் கூற்றாம் 3 அப்பதிகம் பாடியவர், முதற் பராந்தக சோழ னுடைய இரண்டாம் புதல்வராகிய கண்டராதித்தரே என் பது முன் விளக்கப்பட்டுள்ளது. எனவே, திருவிசைப் பாவிலுள்ள கோயிற்பதிகம் பாடிய முதற் கண்டராதித்த ருடைய பேரனே கோயில்களின் கண்காணிப்பாகிய ஸ்ரீ காரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இவ்வரச குமாரன் 1. S. I. I., Vol. VIII, No. 223 ; Ibid, Vol. II, p. 6 and No. 95 ; Ins. 44 of 1907. 2. Ibid, Vol. III, No. 49 ; Ins. 282 and 283 of 1906; IDs. 218 of 1921. 3. சோழ வமிச சரித்திரச் சுருக்கம், பக். 12.