பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 147 கொண்டுவந்த இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங் களுள் இவன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவன். இராசேந்திர சோழன் தன் ஆட்சியின் ஏழாம் ஆண் டாகிய கி. பி. 1018-ல் தன் முதற் புதல்வன் இராசாதி ராசனுக்கு இளவரசுப் பட்டஞ்சூட்டி அரசாங்க அலுவல் களைப் பார்த்துவருமாறு செய்தான். அச்செயலால் அரசற் குரிய அரசியற் பொறை ஓரளவு குறைந்து போவதும் பின்னர் அரசனாகி ஆட்சிபுரிய வேண்டியவன் அரசியற் கருமங்களிற் சிறந்த பயிற்சி பெறுவதற்குத் தக்கவாய்ப்பு ஏற்படுவதும் ஆகிய இருவகை நன்மைகள் உண்டாதல் உணரற்பாலதாகும். அன்றியும் அரசனாக இருந்து ஆட்சி புரிந்து கொண்டிருப்பவன், தனக்குப்பின் அரசாளும் உரிமையுடையவனைத் தன் ஆட்சிக் காலத்திலேயே இளவரசனாக முடிசூட்டிவிட்டால் பிற்காலத்தில் ஆட்சி யுரிமைபற்றி அரச குமாரர்களுக்குள் எத்தகைய போர் நிகழ்ச்சியும் ஏற்படாது. மேலும், உள் நாட்டில் அதுபற்றிக் கலகமும் குழப்பமும் உண்டாகமாட்டா. ஆதலால் இராசேந்திரனுடைய அருஞ்செயல் மிகப் பாராட்டத் தக்கதொன்றாம். இனி, இவனது மெய்க்கீர்த்தி, ' திருமன்னி வளர இரு நில மடந்தையும் - போர்ச்சயப் பாவையும் சீர்த்தனிச் செல்வியும்- தன் பெருந் தேவியராகி இன்புற' என்று தொடங்குகின்றது. அம்மெய்க்கீர்த்தி, இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில் தான் 2 முதலில் காணப்படுகிறது; எனினும், அது மிகுதியாகக் காணப் இவன் இளவரசுப்பட்டம் பெற்றது கி. பி. 1018-அம் ஆண்டில் மார்ச்சு 15-க்கும் டிசம்பர் 3-க்கும் இடையில் ஒரு நாளில் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பர். (Ep. Ind Vol, IX, p. 218.) 2. Ins. 451 of 1908.