பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 155 யுடைய சாந்திமத்தீவில் 1 பரசிராமனால் வைக்கப்பட்டிருந்த செம்பொன் முடியைக் கி. பி. 1019-ஆம் ஆண்டில் கவர்ந்து கொண்டான் என்றும் உணர்த்துகின்றன. இனி, இராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் காணப்படாத சில செய்திகள் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் உள்ளன. அவை :- இவன் திக்குவிசயம் செய்யக் கருதி, தான் இல்லாதபோது சோழநாட்டில் ஆட்சி அமைதியாக நன்கு நடைபெறுமாறு தக்க ஏற்பாடு செய்துவிட்டுத் தென்றிசை யிலுள்ள பாண்டிய நாட்டின்மேல் படையெடுத்துச் சென் றான். பாண்டியன் எதிர்த்துப் போர்புரியும் ஆற்றலில்லாத வனாய்ப் புறங்காட்டி யோடி மலையமலையில் ஒளிந்துகொண் டான். பிறகு, நம் இராசேந்திரன் பாண்டியன் புகழுக்குரிய முத்துக்கள் எல்லாவற்றையும் கைப்பற்றிக்கொண்டு, தன் மகன் சோழ பாண்டியன் அந்நாட்டை யாண்டு வருமாறு செய்து மேற்கே சென்றான். பரசிராமனால் பண்டை வேந்தர் கள் அடைந்த அல்லல்களைக் கேள்வியுற்ற இவ்வேந்தன், அவனை இந்நிலவுலகில் காணமுடியாமையால் அவன் அமைத்த நாட்டைக் கைப்பற்ற விரும்பினான். அதனை நிறைவேற்றும் பொருட்டு, இவன் மலையமலையைக் கடந்து சென்று, சேர மன்னரோடு பெரும் போர்புரிந்து வெற்றி எய்தித் தன் நாட்டிற்குத் திரும்பினான்-என்பனவேயாம். இவன் தந்தையின் ஆட்சிக்காலத்திலேயே சேர நாடும் பாண்டி நாடும் சோழரது ஆட்சிக்குள்ளாகிவிட்டன என் பது அந்நாடுகளில் காணப்படும் கல்வெட்டுக்களால் நன்கு புலப்படுகின்றது 2. ஆகவே, இராசேந்திர சோழன் 1. சாந்திமத்தீவு என்பது அரபிக்கடலிலிருந்த ஒரு தீவாதல் வேண்டும். 2. T. A. S., Vol. II, No. 1; Ibid, Vol. IV, No. 29; Ibid, Vol. VI, Nos. 102, 104 and 105; S. I. I., Vol. V, Nos. 724 and 756; Ins. 333 of 1923; 84 of 1927; 2 of 1927 132 of 1910; 272 of 1928; 713 of 1916.