பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 165 நாடுகளைத் தன்னகத்துக்கொண்டு நிலவிற்று. அந்நாடு களிலிருந்த அரசர்கள் எல்லாம் மகிபாலனுக்குக் கீழ்ப் படிந்து கப்பஞ் செலுத்திவந்தனர். எனவே, அக்காலத்தில் அம்மகிபாலன் பேரரசனாகத் திகழ்ந்தனன் என்பது தேற்றம். சோழநாட்டுப் படைத்தலைவன், முதலில் அப்பக்கத்திலிருந்த குறு நிலமன்னர்கள் எல்லோரையும் வென்று, இறுதியில் பேரரசனாகிய மகிபாலனையும் போரில் புறங்காட்டி யோடும்படி செய்து, தோல்வியுற்ற மன்னர்களின் தலை களில் கங்கைநீர் நிரம்பிய குடங்களையும் வைத்துக் கொண்டு 1 தன் நாட்டிற்குத் திரும்பினான். அப்படையெழுச்சி நிகழ்ந்தபோது, இராசேந்திர சோழ னுடைய படைத்தலைவன், கங்கைப் பேராற்றில் யானைகளை வரிசையாக நிறுத்திப் பாலங்கள் அமைத்து, அவற்றின் மீது தன் படைகளைச் செலுத்தி அவ்வாற்றை எளிதாகக் கடந்துசென்றான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவது ஈண்டுக் குறிப்பிடத் தக்கதோர் அரிய செய்தி யாகும்.2 கை வடநாட்டில் வெற்றித்திருவை மணந்து பெரும் பொருளும் கங்கை நீரும் கைக்கொண்டு திரும்பிவந்த தன் படைத்தலைவனை, நம் இராசேந்திரன் கோதாவரி யாற்றங் கரையிற் கண்டு3 பெருமகிழ்ச்சியுற்று, அவன் கொணர்ந்த வற்றை ஏற்றுக்கொண்டு அவனோடு தன் நாட்டிற்குத் திரும்பினான். அவ்வாறு இவன் திரும்பி வரும்போது இடையிலுள்ள திருப்பதிகளில் இறைவனை வணங்கி நிவந்தங்கள் அளித்த செய்தி கல்வெட்டுக்களில் காணப் படுகின்றது. கங்கைகொண்ட சோழபுரத்திற்குத் தென் கிழக்கே பத்துமைல் தூரத்தில் உள்ளதும் இக்காலத்தில் திருலோக்கி என்று வழங்குவதும் ஆகிய திரைலோக்கிய 1. Travancore Archaeological Series, Vol. III, No. 34. Verse 71, 2. S. I. I., Vol. III, No. 205, Verse 112. 3. Ibid, Verses 118, 119 aud 122.