பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பிற்காலச் சோழர் சரித்திரம் யாளர்கள் கருதுகின்றனர் 1. திரிலோசன சிவாசாரியாரது சித்தாந்த சாராவளியின் உரையில் இராசேந்திர சோழன் கங்கைக் கரையிலிருந்து பல சைவர்களை அழைத்துவந்து காஞ்சிமா நகரிலும் சோழ நாட்டிலும் குடியேற்றினான் என்று சொல்லப்பட்டுள்ளது 2. அவ்வுரையில் குறிப்பிடப்பெற்ற சைவர்கள் சைவாசாரியர்கள் போலும். இனி, இவனது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களில் காணப்படும் மெய்க் கீர்த்தி, இவன் கப்பற்படை.களைக் கடல் நடுவிற் செலுத் திக் கடாரங்கொண்ட செய்தியை விரிவாகக் கூறுகின் றது. திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் அச்செய்தி மிகச் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கடாரப் படையெடுப்பைப்பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு இவன் மெய்க்கீர்த்தியே சிறந்த கருவி யாகும். அப்படையெழுச்சி கி. பி. 1025-ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்ததாதல் வேண்டும். கடல் கடந்து சென்று பகைவர்களோடு போர்புரிவது அக்காலத்தில் எளிதன்று. ஆதலால், இன்றியமையாமைபற்றியே இராசேந்திரன் அப்படையெடுப்பில் ஈடுபட்டிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இராசராச சோழன் ஆட்சியின் பிற்பகுதியிலும் இரா சேந்திர சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் சோழ இராச்சியமும் கடார இராச்சியமும் தம்முள் நட்புக் கொண்டிருந்தன என்பது ஆனைமங்கலச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது 3. அத்தகைய நிலையிலிருந்த அவ்விரு இராச்சியங்களும் சில ஆண்டுகளில் பகைமைகொண்டு ஒன்றன் மேல் மற்றொன்று போர் தொடங்கும் நிலையை 1. The Colas, Vol. 1, p. 254. 2. Ibid. 3. The Larger Leiden Plates of Rajaraja I. Ep. Ind., Vol. XXII, No. 34.