பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xix

பராந்தகன் தன் மகளை நான்காம் கோவிந்தனுக்கு மணஞ் செய்து கொடுத்தமை - சில ஆண்டுகளில் கோவிந்தன் மூன்றாம் கிருஷ்ணனிடம் தன் நாட்டையிழந்து தஞ்சை யில் தங்கியிருந்தமை-பராந்தகன் தன் மருமகனுக்காகப் படையெடுத்துச் சென்று மூன்றாம் கிருஷ்ணனோடு போர் புரிந்து தோல்வியுற்றமை-பராந்தகன் சோழ இராச்சியத் தின் வடபகுதியில் அமைத்திருந்த பாதுகாப்புப்படை கள் - கிருஷ்ணதேவன் படையெடுப்பு-தக்கோலப்போர்பராந்தகன் முதல் மகன் இராசாதித்தன் போரில் இறந் தமை-தொண்டை நாட்டைப் பராந்தகன் இழத்தல்திருமுனைப்பாடி, தொண்டை நாடுகளைக் கிருஷ்ணதேவன் கைப்பற்றி ஆட்சிபுரிதல் - பராந்தகன் ஆட்சியின் இறு திக் காலத்தில் சோழ ராச்சியத்தின் பரப்புச் சுருங்கி யமை - இவன் தன் இரண்டாம் புதல்வன் கண்டராதித்த னுக்கு இளவரசுப்பட்டம் கட்டியமை-- பராந்தகன் தில்லை யம்பலத்தைப் பொன்வேய்ந்தமையும் பிற சமயத் தொண் டும்- வீரநாராயணன் ஏரி - சோழவாரிதி- கிராம ஆட்சி முறை-சிறப்புப் பெயர்கள் - மனை வியரும் மக்களும்.

6. கண்டராதித்த சோழன்

62--68

கண்டராதித்தன் முடிசூடியது - சோழ ராச்சியத்தின் நிலைமை-கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் அமைத் தமை- கண்டராதித்தப் பேரேரி -- இவ்வேந்தன் திரு விசைப்பா இயற்றியமை -- மனை விமாரும் புதல்வனும்மேற்கெழுந்தருளிய தேவர், சிவஞான கண்டராதித்தர் என்ற பெயர்களைப் பெற்றமை - அரிஞ்சயன் இளவரசுப் பட்டம் பெறுதல் - கண்டராதித்தன் இறுதிக்காலம்செம்பியன் மாதேவியார் திருநல்லத்தைக் கற்றளியாக

அமைத்து நிவந்தம் வழங்கியமை.

7. அரிஞ்சய சோழன்

69-72

அரிஞ்சயன் முடிசூடியது – தன் மகளை வாணர்குல மன்ன னுக்கு மணஞ்செய்து கொடுத்தது-தொண்டை நாட் டைக் கைப்பற்ற முயன்றது-ஆற்றூரில் துஞ்சியது – மனைவிமாரும் புதல்வனும்- மேற்பாடியில் முதல் இராச ராசன் அரிஞ்சயேச்சுரம் எடுப்பித்தமை.