பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 183 பற்றிக் கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் பெயர் எய்துவதாயிற்று. தஞ்சை இராசராசேச்சுரத்தின் மீது பதிகம் பாடியுள்ள கருவூர்த் தேவர் என்னும் பெரியார் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீதும் ஒரு பதிகம் 1 பாடியுள்ளனர். அப்பதிகம் சைவத் திரு முறைகள் பன்னிரண்டினுள் ஒன்றாகிய ஒன்பதாம் திரு முறையில் திருவிசைப்பா என்னும் பகுதியில் உளது. கங்கைகொண்ட சோழேச்சுரம் அமைப்பில் தஞ்சை இராசராசேச்சுரத்தை ஒத்தது எனலாம். ஆனால், உரு வத்தில் தஞ்சைக் கோயிலினும் சற்றுச் சிறியது ; சிற்பத் திறத்தில் உயர்ந்தது. கர்ப்பக்கிரகம், அதனைச் சூழ்ந்த பிராகாரம், இடிந்த கிழக்குக் கோபுரம் என்பவற்றைத் தவிர எஞ்சிய பகுதிகள் எல்லாம் இடிந்தழிந்து போயின 2. விமானம் தஞ்சைப் பெரிய கோயில் விமானத்தைப் போல் மிக அழகாக அமைந்துள்ளது. அது நூறடிச் சதுரமாக இருப்பதோடு நூற்றெழுபதடி உயரமும் ஒன் பது நிலைகளும் உடையது. 3 மேலே செல்லச்செல்லச் சிறுத்துச் செல்லும் இயல்பினதாய் உச்சியில் ஒரே கல்லாலாகிய சிகரத்தை உடையது. அவ்விமானத்தின்கீழ் மிகப்பெரிய சிவலிங்க வடிவத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது திருப்பெயர் கங்கைகொண்ட சோழேச்சுரர் என்பது. அப்பெருமானது நாள்வழிபாட்டிற்கும் பிற வற்றிற்கும் இராசேந்திர சோழனும் இவன் வழித் தோன்றல்களும் நிவந்தமாக வழங்கியுள்ள ஊர்கள் பல. 1. திருவிசைப்பா திருப்பல்லாண்டு (கழகப் பதிப்பு) பக்கங் கள் 59-63. இப் பெருங்கோயிற் கற்களைக்கொண்டு திருப்பனந்தா ளுக்கு வடக்கே மூன்று மைலிலுள்ள கொள்ளிடப் பேராற் றிற்கு ஆங்கிலேயர் ஓர் அணை கட்டியிருப்பது அறியத் தக்கது. அதிலுள்ள கருங்கற்களில் பழைய கல்வெட்டுக் கள் இருத்தலை இன்றுங்காணலாம். இவ்வாறு பலரும் இடித்து எடுத்துக்கொண்டு சென்ற கருங்கற்களிலுள்ள கல்வெட்டுக்கள் பல அரிய வரலாற்றுக் குறிப்புக்களை யுடையவா யிருத்தலுங்கூடும். 3. Indian Antiquary, Vol. IX, pp. 117-120.